கதையாசிரியர் தொகுப்பு: தமிழ்த்தேனீ

3 கதைகள் கிடைத்துள்ளன.

பால பாடம்

 

 ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ். வியர்வையில் தொப்பலாய் நனைந்திருந்தது அவன் சொக்காய். இந்த லட்சணத்திலே டை வேற கட்டிண்டு, தினமும் ஆபீசுக்குப் போகணும். கழுத்தை இறுக்கிற்று டை. அதை முதலில் முடிச்சவிழ்த்துத் தளர்த்தினான். வழியெங்கும் மணலும் தூசியும் கண்ணில் விழுந்து கண்களையே சிவப்பாக்கி வைத்திருந்தன. ஸ்கூட்டரின் கண்ணாடியில் அவன் முகமே அவனுக்கு விகாரமாய்த் தெரிந்தது. எப்பிடியாவது ஒரு கார் வாங்கணும். என்று நினைத்துகொண்டு பக்கவாட்டில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சுரேஷ். வழக்கமாய் அவன்


மனோதத்துவம்

 

 ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு, ‘சரி டாக்டர் அப்பிடியே செய்யறேன். எனக்கு என் மகன் குணமானா போதும்’னு சொல்லிக் கொண்டே, அதே போல அவர் சொல்வதையெல்லாம் செய்துவிட்டு, அதன் விளைவுகள் என்ன, என்று ஒவ்வொரு வாரமும் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து எதிரே உட்கார்ந்து மிகப் பவ்வியமாக, ‘சரி டாக்டர், சரி டாக்டர்’ என்று பொறுமையாக கேட்டுக்கொள்ளும் பெரியவர் ராமநாதனைப் பார்த்து, மனோதத்துவ நிபுணர் சரபேஸ்வரன், “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க மகன் குமரேசனைக்


கா(ஞ்)சித் துண்டு

 

 பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள். பெரியவர் ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார். அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித் துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார். எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு. காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப்பட்டபோது வாங்குவார். அந்தத் துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? அந்தத் துண்டு மெலிதாக இருக்கும். அதன்