கதையாசிரியர் தொகுப்பு: தங்கர்பச்சான்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கலைஞர்களும் திருடர்களும்

 

 எது பருவம் தப்பினாலும், இந்த ஆடி மாதக் காற்று மட்டும் தப்புவதே இல்லை. நெடிதுயர்ந்த பனை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டே இருந்தன. விழுவதற்குத் தயாராக மரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த காய்ந்த பனை மட்டைகள் எழுப்பும் ஓசை மட்டுமே ஓடை முழுக்கக் கேட்டது. ராசதுரை தண்ணீரில் இருந்து எழுந்து வெளியே வர மனம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்த ஊற்று நீர் ஓடையில் குளித்தபடியே சத்தம் போட்டுக் கத்தினான். அவனது ஒவ்வொரு சொல்லும் சுற்றியிருந்த மலையில் பட்டு


இசைக்காத இசைத்தட்டு!

 

 கொடிபவுனு அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால்… நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாகப் பிடித்துக்கொண்டு ஏரிமேட்டினைக் கடந்து மலைக்குள் இறங்கி, ஓடைக்குள் நடந்து, சுடுகாட்டு வழியாக அம்மா வீட்டுக்கு அரை மணி நேரத்தில் வந்து விடுவாள். சுடுகாட்டைக் கடந்து வரும் போது அவள் மனதுக்குள் அழிக்க முடியாத பயம் இருக்கும். இப்போது அதற்குப் பதில் ஒவ்வொரு முறையும் அவளது கால்கள் தடுமாறுகின்றன. இருந்தாலும் இந்த வழியை அவளால்