கதையாசிரியர் தொகுப்பு: தக்ஷ்ணாமூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

வழித்துணை

 

 நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக இருக்கும் குடிசைகள். அதில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்னச் சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட். அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர்