கதையாசிரியர் தொகுப்பு: டொமினிக் ஜீவா

13 கதைகள் கிடைத்துள்ளன.

பாதுகை

 

 (2010ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைந்த போது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடது கால் பாதத்தை தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித் தான், முத்து முகம்மது. வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்புவாதை கொண்ட நோயாளியைப் போல, அவனைக் காட்டிக் கொண்டான். ‘- சே!’ காலிலை ஒரு செருப்புக் கிடைத்தால்? திரும்பித் தார்ரோட்டைப்


மானுடம்

 

 சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்னர் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை ஆண்டு விழாவொன்றை யாழ்ப்பாணத்தில் வெகு கோலாகலமாக நடத்தி முடித்தது. அவ்விழாவுக்கென்றே பாரிய ஆண்டு மலரொன்றையும் வெளியிட்டு வைத்தது. அந்த மாநாட்டு மலரில் நானெழுதிய சிறுகதையே இந்தக் கதை. இம்மலரைத் தயாரித்தவர்கள், மகாசபையைச் சேர்ந்த படைப்பாளிகளே. எனது மொத்தச் சிறுகதைகளையும் ஒரு பாரிய தொகுதிக்குள் ஒருங்குசேர இணைத்து வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். எனது படைப்புகள் பல எனது கைவசம் இருக்கவில்லை . அதில் ஒரு சிறுகதை


இவர்களும் அவர்களும்

 

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘சுந்தரம்ஸ் அன்ட் கோ’வின் பிரதம பங்காளியும்’ மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ‘ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்’ உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது அவர்களுடைய அந்தஸ்தைக் குறைப்’ பதாகும். அவர்களுடைய விஷயங்களில் எதையும் ‘கோய பல்ஸ்’ பாணியில் பெருக்கிச் சொல்வது தான் முறை. இரு


கரும்பலகை

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி – வகுப்பெங்கும் ஆழ்ந்த மௌனம் நிலவுகின்றது. கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் தோன்றுகிறார், அவர் கண்கள் அக்கினிக் கெந்தகக் குழம்பைக் கக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதயத்தினுள்ளே கொதிப்படைந்த உணர்ச்சிக் குமுறல்கள்…கொந்தளிப்புகள், எண்ணப் போராட்டங்கள். “யாரடா இந்தப் படத்தைக் கீறினவன் ? எழுந்து நில்லடா?”-மயானத்தின் மௌனத்தைக் கிழித்தெறிந்த


ஞானம்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாழ்ப்பாணம். மூன்றாம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புறமாகப் ‘பவுண் மார்க்’ ஓட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியிலிருந்து பத்து கஜ தூரத்தில், தனிமையில்-விரகதாபத்துடன் தவிக்கும் பெண்ணைப் போன்று காட்சி தரும் – முனிசிப்பல் மின்சாரக் கம்பம். அதன் தலைப்பில் மின்மினிப் பூச்சியின் கைவிளக்கேந்தி மினுக்கிக் காட்டும் ‘பல்ப்’. அதன் ஒளிக்கற்றைகள் சக்தி குறைந்தனவாக, மிக மிக மங்கிய


முற்றவெளி

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஹை , ஹை!…த்தா!…த்தா ! சூ…! சூ…!” என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடுகளை சின்னக் குட்டியன் வரிசைப் படுத்தித் தனது க்ட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் பகீரத முயற்சி செய்தான். அவனது அதட்டல்களைப் பொருட்படுத்தாது ஒன்றிரண்டு மாடுகள் கட்டுக்கு அடங்காமல் வீதியில் சிதறி ஓடத்தான் செய்தன. கையிலுள்ள தடியை உயர்த்தி


சிலுவை

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம். இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் அநுபவ இலக்கியத்தில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு; மதிப்புண்டு. ஆனால், இது நாவலல்ல; சிறுகதையுமல்ல -வெறும் கடிதம். ஆமாம், நண்பா! உனக்கெழுதும் கடிதம் தான் இது… இக்கடிதத்தை எப்படி ஆரம்பித்து எழுதுவேன்? உன்னை-என் இதயத்துக்கு மிகவும்


தீர்க்கதரிசி

 

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாரிஸ்டர் பரநிருப சிங்கர் பாமரனாக மதிக்கப்பட்டார். நேற்றைக்கு இருந்த கௌரவம்? அந்தஸ்து ? இராஜ நடை போட்ட மிடுக்கு ? எல்லாம் ஒருசேர நொறுங்கி… தாங்க இயலாத நெஞ்சக்குமுறல். பெரிய மனிதத் தனத்திற்கே எமதூதுவனாக விளங்கும் விழுக்காடு… ‘சே! என்ன வாழ்க்கை ?’ நெஞ்சைப் பிளந்து வெளிக்கிளம்பும் வெறுப்பின் எதி ரொலி. இரண்டு பரம்பரை காலமாக, கொழும்பையே தான் பிறந்த திருவிடமாகக் கொண்ட


காலத்தால் சாகாதது

 

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நம்மீது-இலங்கை மக்கள்மீது-ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு. இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள் தான் விதானைமார்கள். இந்தத் திருக் கூட்டத்தினர், இப்பொழுது பல்லிழந்த பாம்புகளைப்போல தங்கள் அதிகாரங்கள் பலவற்றை இழந்திருப்பினும், இந்த உண்மையை உணராது விதானைமார் பரம்பரையில் உதித்து, மமதையுடன் வாழ்பவர்தான் மயில்வாகனம் அவர்கள். “அவருடைய விருத்தாந்தங்களையெல்லாம் எழுதிமுடிப்பதற்குள், ஒரு பாரதமே பாடி முடித்து


செய்தி வேட்டை

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காக்காய் பிடிப்பது ஒரு கலையென்றால், கயிறு திரிப் பதும் ஒரு கலைதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்தான் நமது நித்தியலிங்கம் அவர்கள். கயிறு திரிப்பது என்பது அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட கலை மட்டுமல்ல, தொழிலும்கூட. நித்தியலிங்கம் ஒரு நிருபர். தினசரிப் பத்திரிகை யொன்றில் விசேஷச் செய்தி நிருபர். பங்குனி மாதத்துத் தாரை நீராக்கும் மதிய வெயிலில் பட்டணத்துத் தெருக்களில் இரண்டே இரண்டு