கதையாசிரியர் தொகுப்பு: டி.பாலமுருகன்

1 கதை கிடைத்துள்ளன.

நிர்வாண நகரம்

 

 இந்த தினத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்ததென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. நினைவு தெரிந்த நாள் தொட்டே ஒரு கார் வாங்க வேண்டுமென்பது என் வாழ்வின் குறிக்கோள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. சின்ன வயசில் அம்மா எதாவது வாங்கிவரக் கடைக்கு அனுப்பினால், அந்தப் பயணம், என் மானசீகக் காருடன்தான். காற்றிலேயே கியர் மாற்றி, ஸ்டியரிங் திருப்பி, ஹாரன் அடித்து, அமர்க்களம் பண்ணிய எனக்கு அச்சாரமாய் அமைந்தது Boost-க்கு இலவசமாய் வந்த ரேசிங் கார். அது எங்கள் வீட்டில் பயணிக்காத