கதையாசிரியர் தொகுப்பு: டி.ஜார்ஜ் வில்லியம்

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவும் ப்ளஸ் டூவும்

 

 புதன்கிழமை காலை 9 மணி. அன்று, ப்ளஸ் 2 ரிசல்ட். காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, செய்தித்தாள் தலைப்பு செய்தி. வீட்டின் பால்கனியில் அமர்ந்து, செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார் மணவாளன். நடுத்தர வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதி அது. கையில் கரண்டியுடன், சமையலறையில் ஒரு கண்ணும், தன் கணவனை ஒரு கண்ணும் பார்ப்பதுமாக இருந்தாள் லட்சுமி. தன் கணவனின் கண் பேப்பரில் இருந்தாலும், மனது அங்கில்லை என்று அவளுக்கு தெரியும். பதினொரு மணிக்கு வரப்போகும் தன் மகனின்