அமெரிக்கப் பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,693 
 

மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள்.

அவள், அந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் காஞ்சனாவிற்கு எரிச்சலும், கோபமும் மிகுந்தது. ‘எப்போதும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்கின்ற பெண் காஞ்சனா. ஏன் இப்படி மாறினாள்’ என்று குடும்பத்தினரிடையே ஒரு சிறிய சலசலப்புக் கூட ஏற்பட்டது.

காஞ்சனாவின் வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவளுடைய அத்தைப் பையன் கணேசன், மதுமிதா பால்குளத்திற்கு வந்ததிலிருந்து கல்லூரியைக் கூட மறந்து அமெரிக்காவிலிருந்து வந்திருந்த மதுமிதாவிற்கு கல்வெட்டுகள் நிறைந்த சின்னச் சின்ன கிராமங்கள், கோயில்கள் என்று அவள் விரும்பிய சரித்திர ஆராய்ச்சிக்காக அவளுக்கு திருச்சியையும் அதைச் சுற்றியுள்ள இடங்களியும் சுற்றிக்காட்ட ஆரம்பித்தான். தினம் தினம் ஊர் சுற்றுவதோடு சாயங்காலம் வீடு திரும்பியதும் காஞ்சனா “டிபன் கொண்டு வா, சூப்பரா ஒரு பில்டர் காபி கொடு. அமெரிக்காவில் எங்களுக்கு பில்டர் காபியே கிடைக்கது.” என்று மதுமிதா கேட்கும்போது கோபத்தில் குமுறி எழுவாள் காஞ்சனா.

கணேசன் கல்லூரி முடித்ததும் நல்ல வேலையில் சேர்த்து விடவேண்டிய பொறுப்பு காஞ்சனாவின் தந்தை குமரேசப் பெருமாளுடையது. அதற்குப் பதிலாக காஞ்சனாவை கனேசனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெரியவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

‘மதுமிதா எப்போது ஊருக்குப் போவாள்’ என்று கோபித்துக் கொண்டே இருந்த காஞ்சனா காபி எடுத்துக் கொண்டு மதுமிதாவின் அறைக்குள் வர.. அங்கே சப்தம் கேட்டு ஒதுங்கி நின்றாள்.

“ஏய் கணேஷ் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறீர்களா?”

“பண்ணீக்கொண்டால் போச்சு”

“ஏய் நாம் சீரியஸாக கேட்கிறேன்.”

“உன் வயதென்ன மது”

“பதினெட்டு”

“இது கல்யாணம் பண்ணுகிற வயசா?”

“நான் மேஜர் தெரியுமா?”

“என்ன சொல்ல வர்றே”

“என்னைக் கல்யாணம் பண்ணக்கொள்கிறாயா?”

‘சரி” என்று கனேசன் முடிப்பதற்குள் அதிர்ச்சியில் காஞ்சனாவின் கையிலிருந்த காபி கப் விழுந்து சிதறியது.

“ஏய். காஞ்சனா என்னாச்சு? ஓடி வந்தாள் மதுமிதா. “உன் தலையாச்சு” என்று கத்திக் கொண்டு சமையலறைக்குள் ஓடிப்போய் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

“வாட் ஹாப்பண்ட் யா கணேஷ்”?

மதுமிதா கணேசன் பக்கம் திரும்பினாள்.

“ஒன்றுமில்லை, நீ எப்போது அமெரிக்கா போகிறாய்?”

“இன்னும் ஒரு மாதமாகும்”

“சென்னைக்கு…?”

“அடுத்தப் புதன் கிழமை கிளம்புகிறேன். அதற்கு முன்னால வால்புத்தூரில் கொஞ்சம் கல் வெட்டுகள் பார்த்ததாக பென்னட் நேற்று அமெரிக்காவிலிருந்து போன் பண்ணிச் சொன்னான். நாளைக்குப் போகலாமென்றிருக்கிறேன். நீ வருவேயில்ல.”

“எனக்கு வேற என்ன வேலை?” என்றான் கணேசன்.

“குட் பாய்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டுச் சென்றாள் மதுமிதா.

மறுநாள் காலை இருவரும் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது மதுமிதாவிற்கு போனில் அழைப்பு வர வேகமாக ஓடினாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த காஞ்சனா, வேகமாக வந்து “உங்கள் மனதில் என்னதான் நினைத்திருக்கிறீர்கள்”? என்றாள் கணேசனின் அருகில் வந்து.

“நான் ஒன்றும் நினைக்கவில்லை”

“ஒரு சின்னப்பொண்ணு அமெரிக்கா அப்பிடீன்னு சொல்லிக் கொண்டு ஜீன்ஸ்ஜும், ஆம்பிள்ளைச் சட்டையும் போட்டுக் கொண்டு வந்தால் வாயைத் தொங்கபோட்டுக் கொண்டு திரிவீரள் அப்படித்தானே”

“காஞ்சனா என்ன சொல்கிறாய் என்று புரிந்துதானே பேசுகிறாய்?”

“ஆமா எங்கே தெரியுதுண்ணு அலையிற ஆட்களை அடக்க முடியலைண்ணா, எப்படி நான் பேசுகிறது.? என்னவோ மதுமிதாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று கூட சொன்னீஙளே. அவள் உங்களுக்கு முத்தம் கூட கொடுத்து விட்டுப் போகிறாள்.”

“ஆமாம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் போகிறேன். உனக்கு என்ன?”

“என்னது ..?” ன்றவாறு அதிர்ச்சியில் தரையில் அமர்ந்து தலையில் கையை வைத்து அழ ஆரம்பித்தாள் காஞ்சனா.

“சீ! அசடு மாதிரி அழுதுகிட்டு எழிந்திரு” என்று அவள் கையைப் பிடித்துத் தூக்கினான்.

“என்னைத் தொடாதீர்கள். நீங்கள் அதற்குக் கூட லாயக்குக் கிடயாது.”

“சும்மா எதையாவது மனதில வைத்துக் கொண்டு உளறாதே. அவள் அமெரிக்கா ரிடர்ன். அடுத்த புதன் கிழமை ஊருக்குப் போகிறாள். இளம் வயது. அவள் ‘கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி “சரி” என்றவுடன் எல்லாம் ஆச்சா?”

“அப்புறன் என்ன?” கத்தினாள் காஞ்சனா.

“பொறுமையாக இரு காஞ்டனா. அவள் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு வந்திருப்பவள். அவள் மனதை ஏன் கஷ்டபடுத்த வேண்டும். என்று நினைத்துதான் ‘சரி’ என்றேன். மற்றபடி என் காஞ்சனாவிற்கு யாராவது ஈடாக முடியுமா?” என்று சிரித்தான் கணேசன்.

“அப்படின்னா உங்களை அவள் முத்தமிட்டது?”

“இது அமெரிக்காவிம் சகஜம். நான் திரும்பி அதே கிக்கில் அவளை முத்தமிட வில்லையே”.

“ஸாரி கணேசன். உங்களைத் தப்பாக… “ என்று காஞ்சனா கூறி முடிப்பதற்குள் புயலாக வந்த மதுமிதா “கணேசன் போகலாமா?” என்று அவன் கையைப் பிடித்து இழுக்க, மனது லேசாகிப் போன காஞ்சனா இருவருக்கும் ‘டாடா’ காட்டினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *