கதையாசிரியர் தொகுப்பு: ஜெயஸ்ரீ ஆனந்த்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனைமுகதோனே

 

 அந்த ஊரில் ஒரு அரசமரம் ஒன்று இருந்தது. அதன் அடியில் ஒரு சிறிய பிள்ளையார். அசரமரத்தை சுற்றிக்கொண்டு போனால் பின்புறம் கொஞ்சம் தள்ளி குளம். குளத்தை கடந்து சிறிது தூரம் சென்றால் அரசு பள்ளிக்கூடம். அந்த ஊரில் புதிதாக யாரேனும் வழி கேட்டால் பிள்ளையாரை வைத்துதான் வழி காட்டுவார்கள். அந்த. ஊரை கடந்து சென்றாலும் பிள்ளையாரை தாண்டிதான் செல்லவேண்டும். அதனாலேயே எல்லோரும் அவரை அரசமர பிள்ளையார் என்றே அழைத்தனர். புதிதாக வந்தவர்களுக்கு வழி காட்டுவதோடு பிள்ளையாரின் வேலை


போராளி…

 

 ராகவ் மணி எட்டாச்சு கெய்சர் போட்டு இருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வா., டிபன் ரெடி., காயத்திரீ அழைத்தாள். கொஞ்சம் இரும்மா ஆபிஸ் வேலையை முடிச்சுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே ராகவ் முன்னால் இருந்த லேப்டாப்பில் ஆபீஸ் பைலை மினிமைஸ் செய்துவிட்டு பேஸ் புக் பக்கத்தை திறந்தான் ஏகப்பட்ட மெஸேஜ் இணைப்புகள். வெள்ளோட்டமாக பார்த்துவிட்டு அவனது ஸ்டேடஸ் பக்கத்தில் “இருக்கு ஆனால் இல்லை ” என்று போஸ்ட் செய்துவிட்டு லாப்டாப்பை மூடி கையில் மொபைலுடன் பாத்ரூம் நோக்கி சென்றான்.