கதையாசிரியர் தொகுப்பு: ஜெயந்தன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பரிணாமம்

 

 ஒரு நாள் ஞானக்கிறுக்கன் திருவருட்பா படித்துக் கொண்டிருந்தான். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…’ ஏற்கனவே இவனதை இரண்டொரு முறை காது வழி கேட்டிருத்தாலும் இப்போதுதான் அது தெஞ்சை முழுமையாகத் தாக்குவதாக இருந்தது. வாடிய பயிருக்கும் வாடும் மனுஷ மனமா? அவனுள்ளே ஏதோ குலுங்கியது. என்னகருணைக் கடல் இது? தன்னைப் போன்ற மனிதனுக்காக மட்டுமல்ல, வலியையும் வேதனையையும் முழுமையாக உணரக்கூடிய சக ஜீவராசிகளுக்காக மட்டுமல்ல, ஓரறிவு தாவரங்களுக்காகவும் கண்ணீர் சிந்த முடியுமா? மிருகத்திலிருந்து பிரிந்து வந்த மனிதனுக்கு


பாஷை

 

 –ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி. என்ன நடந்தது ? சொல்லு ராஜி ? –அத்தான், என் மோதிரம் காணாப் போச்சு. –மோதிரம் காணாப் போச்சா ? எந்த மோதிரம் ? –என் நெளி மோதிரம். –எப்பிடிக் காணாப் போச்சு ? –வளையம் கொஞ்சம் பெரிசா இருக்குனு கொஞ்சம் நூல் சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப ஏதோ அவசரமா


பகல் உறவுகள்

 

 காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில் இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அது தினசரி வழக்கம். டெரிகாட்டன் பேண்ட்,டெரிலின் சட்டை,கூலிங்கிளாஸ், மிடுக்கான நடை இவையோடு அவனும்.கலர் மேச் ஆகின்ற உல்லி உல்லி சேலை,ஃபுல்வாயில் ஜாக்கெட்,செருப்பு,கைப்பை இவையுடன் அவளும். அந்த ஜோடி நடை தினம் வேடிக்கைப் பார்க்கப்படுகின்ற ஒன்று. கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் அப்படித்தான் புறப்படுகிறார்கள்,வந்து சேருகிறார்கள் என்றாலும் சிலரது கவனத்தை இன்னமும் ஈர்க்கத் தவறாத ஒன்று. சிலருக்கு