கதையாசிரியர் தொகுப்பு: ஜெயகணேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

பீலி பெய் சாகாடும்

 

 மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான். இருந்தாலும், பழகி விட்டது. அப்பாவின் முகம் வாடியிருந்தால் எந்த வேலையுமே ஓடாது. பை யாரோடது. லக்கேஜ் வாங்கணும். யாரு பை – கண்டக்டர் சத்தத்தில் சிதறியிருந்த கவனம் பஸ்சுக்குள் வந்தது. அண்ணே. ரிட்டன் போறதுதான்னே. உள்ள வெறும் பைதான்னே. சரக்கு கொஞ்சம்தான்ணே இருக்கு. அதுக்கு லக்கேஜாண்ணே – கொஞ்சம் கெஞ்சுறமாதிரி கேட்டேன். என்ன சரக்கு. அண்ணே.