கதையாசிரியர் தொகுப்பு: செல்வேந்திரன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லெனப்படுவது…

 

 தினசரி டார்கெட்டை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் கைலிக்கு மாறி, டீ குடிக்கக் கிளம்பியபோது, நண்பர் கிருஷ்ணாவிடமிருந்து போன்! ”கொஞ்சம் உடனே கிளம்பி, ராயபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியுமா?” என்று பதற்றக் குரலில் கேட்டதில், ஏதோ பெரிய பிரச்னை என்று புரிந் தது. சரி, நேரில் பேசிக்கொள்ளலாம் என அவசர மாக பைக்கை எடுத்துக்கொண்டு, ராயபுரம் கிளம்பினேன். உள்நாட்டுக் குழப்பமும், வறுமையும் உந்தித் தள்ள, இரண்டு தலைமுறைகளுக்கு முன் நேபாளத்தை விட்டுப் புலம் பெயர்ந்து, சென்னையில் குடியேறியவர் கிருஷ்ணாவின்


ரஜினியும் அப்பாவும்

 

 ரஜினிக்கும் என் தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. சாத்தூர் வேல்சாமி நாயக்கர், அப்பாவின் பால்ய நண்பர். இருவருக்கும் அப்படியரு நெருக்கம். ஒருவருக்கொருவர் கலந்துகொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்டிக்கொள்ள பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. வேல்சாமி நாயக்கர், அப்பாவைவிட ஐந்து வயது சிறியவர். வேறு ஊர்க்காரர். தெலுங்கர். இருவரும் தீப்பெட்டி கம்பெனி ஒன்றில் ஃபோர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல


மயக்கமென்ன

 

 எதிர்க்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை அப்படியே நிறுத்திவிட்டு வேஸ்ட் காட்டனில் க்ரீஸ் கரங்களைத் துடைத்துக்கொண்டான் கணேசன். முதலாளியிடம் விபரம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியாகவேண்டும். போனவாரம்தான் கொஞ்சம் முன்பணம் வாங்கி இருந்தான். திரும்பவும் கேட்டால் கண்டபடி திட்டுவார். வேறு வழியில்லை. ஒருவழியாக தயங்கி, தயங்கி விபரத்தை சொன்னதும் அவரே உள்பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களைத் தந்தார். யூனிபார்மை மாத்திட்டுப் போடா