கதையாசிரியர் தொகுப்பு: சுதேசமித்திரன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

மாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும்

 

 நாகராஜ் வழக்கமாக மிஸ்டுகால்தான் தருவான். அதனால், இரண்டாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுப்பதானால் எடுக்கலாம். அன்றைக்கு இரண்டாவது ரிங் தாண்டி மூன்றாவதற்குப் போய்விட்டது. இருந்தாலும் நாலாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுத்தான் ரகு. எதிர்பார்த்த மாதிரியே விஷயம் சீரியஸானதுதான். நாகராஜின் அப்பா சடகோபன் மாமா காலையில் பள்ளியெழவில்லை. ஏற்கெனவே ஒரு வருடத்துக்கும் மேலாகப் படுத்துக்கிடப்பவர்தான். ரத்தம் சுண்டி, பளபளப்பெல்லாம் மறைந்து, என்புதோல் போர்த்திய கோலம்தான். இன்றைக்குக் காலையில் எழுந்துகொள்ளவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு கன்ஃபார்ம் செய்துவிட்டார் என்ற


காவல்

 

 எல்லாம் இந்த டி.வி-க்காரன்கள் பண்ணுகிற வேலை! காலாகாலமாக இதெல்லாம் ஒழுங்காய்த்தான் போய்க்கொண்டு இருந்தது. மூச்சு முட்டுகிற மாதிரி உடுப்பை மாட்டிக்கொண்டு, ஒரு குட்டியும் கூடவே ஒரு கேமராக்காரனும் வந்து, ஊரில், தெருவில் எல்லாம் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தபோது, ஆளாளுக்குப் பல்லைக் காட்டிக்கொண்டு போய் உளறிக் கொட்டியதால்தான் இந்த வம்பு வந்து சேர்ந்தது. கேமராவைக் கொண்டுபோய் சமாதிக்கு சமாதி முட்டாத குறையாக ஆட்டிக்கொண்டு இருந்தபோதே புத்தி வந்து கேஸட்டைப் பிடுங்கிக்கொண்டு துரத்தியிருக்க வேண்டும். இப்போது புலம்பி என்ன ஆகப்போகிறது.


ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை !

 

 வழி எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தான் குமார். அவனது கார் முன்னைப் போல மைலேஜ் தருவது இல்லையாம்; துவரம் பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறதாம்; இந்த மாதிரி பல பிரச்னைகள். ஆனால், அவை அனைத்துமே கார் மெக்கானிக்கும் பாரதப் பிரதமரும் தீர்த்துவைக்கக்கூடிய பிரச்னைகளாகவே இருந்ததால், அந்த இரண்டு வேலைக்குமே லாயக்கு இல்லாத தான் என்ன செய்ய முடியும் என்பது பாரத் துக்குப் புரியவில்லை. அதிலும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் மூழ்கி, ஒரு பர்சனல் லோனில் மிச்சம் இருக்கும் கேவலம்


கைக்கிளை

 

 உண்மையில் இது ஒரு பேய்க் கதை என்றபோதும், 40 வயதாகிற நாவலிஸ்ட் ஒருத்தன் கடைசி வாய்ப்பாகக் காதலுற்ற கதை என்பதாகவும் இதைச் சொல்லலாம். சனியன் 40 வயசு வரைக்குமா காதலித்துத் தொலைக்கவில்லை என்று கேட்கிற அவசரக்குடுக்கைகள் சற்று வாளா விருங்கள். நல்ல தமிழ் வாத்தியார் வாய்த்திருந்தால், இந்தக் கதையின் தலைப்பே உங்களுக்கு அவனுடைய முந்தைய காதல் கதைகளின் லட்சணத்தை விளக்கியிருக்கும். மற்றவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். கைக்கிளை என்பதாக தமிழ் இலக்கியத்தில் ஒரு திணையே உண்டு. (திணை


நிர்மால்யம்

 

 அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்வித்து, ஆடையுடுத்தும் வித்தையை அவருக்குச் செய்துகாட்டியிருந்தார் வைத்தி. ”நீசப்பய ஊரு ஸ்வாமி இது! தெய்வத்துத் தயவில்லாம வாழ்ந்துடலாம்னு மனசெல்லாம் தடுமன் தடுமனாக் கிடக்கு. கோயில்னு ஒண்ணு இருக்கறது சும்மா ஒரு சுத்துச் சுத்தி வர்றதுக்கு மட்டும்தான்னு எண்ணம். ஈஸ்வரனுக்கும் அம்பாளுக்கும் ஒரு சலாம் போட்டுட்டா முடிஞ்சுபோச்சுன்னு ஒரு எகத்தாளம். அங்கயும் நாலு பேரு