கதையாசிரியர் தொகுப்பு: சி.முருகேஷ்பாபு

10 கதைகள் கிடைத்துள்ளன.

சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்

 

 சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி அவர் செய்த காரியம்! எங்க ஊரிலேயே பெரிய வீடு சரவணன் மாமாவுடையது. காரவீட்டு சரவணன்னுதான் எல்லாரும் அவரைச் சொல்வாங்க. அவரோட சின்ன வயசுலயே அவங்கப்பா தவறிப் போயிட்டாரு. ஆனாலும், கம்பீரமா நிமிர்ந்து நின்ன மோட்டு ஓடு போட்ட வீட்டில் இருந்துக்கிட்டு கஞ்சியும் களியுமா ஊத்தி, காரவீட்டு ஆச்சி சரவணன் மாமாவை வளர்த்துச்சு. நான் ஆறாங் கிளாஸ்


நான் இங்கு நலமே

 

 அன்புள்ள பானுமதிக்கு, என் கையெழுத்து உனக்கு நினைவு இருக்குதா… எனக்கு கிட்டத்தட்ட மறந்தே போயிடுச்சு. இப்போதைக்கு என் நினைவில் இருக்கறதெல்லாம் கம்ப்யூட்டரின் கீ போர்டும் திரையில் ஒளிரும் எழுத்துருக்களும்தான்! சொன்னால் நம்ப மாட்டே… சில நேரங்களில் ‘ஞு’ எழுதுவது எப்படி என்பதில் குழப்பமே வந்துடுது. புதுப் பேனா வாங்கினதும் எழுதிப் பார்க்கும் ஆவலில் எழுதுவோமே… அதுபோலத்தான் புதிதாக வாங்கிய டைரியில் எழுதிப் பார்க்கும் ஆசையில் உட்கார்ந்தேன். கை தானாகவே அன்புள்ள பானுமதிக்கு என்று உன் பெயரை எழுதிவிட்டது.


எங்கடா போயிட்ட?

 

 மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. ‘தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!’ சாவியை எடுத்துக்கொண்டு ரூமை நோக்கி நடந்தேன். இவன் இப்படித்தான்… ஏதாவது கம்பெனி சிக்கினால் சிக்கனும் குவாட்டருமாகக் கொண்டாடிவிட்டு, அகால நேரத்தில் வருவான். ரூமைத் திறந்து உள்ளே போய் பாயை விரித்துப் படுத்தேன். ‘சே! கெட்ட கனவு!’ தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது. சிகரெட் எடுத்துப் பற்றவைக்கும்போது இரவு மணி மூன்று. ‘தட்சிணா இன்னும் வரலையே!” மொபலை எடுத்து அவன் நம்பரைத்


ஒருத்தி

 

 விஜயவாடா ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல் இருக்கும். அந்த ராத்திரியிலும் தோசை விற்றுக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் காலாற நடக்கலாம் என்ற யோசனையில் இருக்கையைவிட்டு எழுந்தேன். மிக அவசரமான பயணம் என்பதால் ரிசர்வேஷன் கிடைக்காமல், ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் இருபத்தைந்து ரூபாய் போர்ட்டருக்குக் கொடுத்துப் பிடித்த இருக்கை. கிட்டத்தட்ட ஒருவர் மேல் ஒருவர் அடுக்கிவைத்த மாதிரி இருந்த நெரிசல், விஜயவாடாவில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சூட்கேஸை எடுத்து இருக்கையில் வைத்துவிட்டு கீழே இறங்கினேன். ஒரே பொசிஷனில்


சம்சாரி

 

 கதிரேசன் பத்திரிகை கொடுத்ததுமே முடிவு செய்து விட்டேன், அவன் கல்யாணத்துக்கு அவசியம் செல்ல வேண்டும். காரணம், கல்யாணம் நடக்க இருப்பது ஆய்க்குடியில்! ஆய்க்குடி…. என் பால்யத்தின் பள்ளி நாட்கள் கழிந்தது அந்த ஊரில்தான். கோலி, செல்லாங் குச்சி, பம்பரம் என எல்லா விளை யாட்டுக்களையும் கற்றுத்தந்தது அந்த ஊர்தான். என் தந்தைக்கு அரசாங்க உத்தியோகம். அடிக்கடி இடம் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். ஒரு முறை, விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த என்னை அழைத்துக்கொண்டு ஆய்க்குடியில் போய் இறங்கினார்


அட்டெண்டர்!

 

 “அட்டெண்டர்! இங்கே வா! இந்த ஃபைலை எல்லாம் கொண்டு போய் மேனேஜர் ரூம்ல வை!” என்று உரத்த குரலில் அழைத்தார் பரசுராமன். அந்த அலுவலகத்தின் ஹெட் கிளார்க். அவன் அதைச் செய்து முடித்ததும், “அட்டெண்டர்! பிரின்ட்டருக்கு டோனர் மாத்து!” என்று உத்தரவிட்டார். “சார்! அந்தப் பையன் கார்த்தி டிகிரி முடிச்சிருக்கான். வேற வாய்ப்பு இல்லாததால, தற்காலிகமா இங்கே அட்டெண்டரா வேலை பார்க்கிறான். அவனை வாய்க்கு வாய் அட்டெண்டர்னு கூப்பிடாம, அழகா பேர் சொல்லியே கூப்பிடலாமே?” என்றார் பக்கத்து


மரியா கேன்ட்டீன்

 

 ‘‘ஒரு மரியா கேன்ட்டீன்…’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர். ‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’ ‘‘சேவியர்ஸ்… எய்ட்டி செவன் – நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக. ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க… உள்ளே போங்க…’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார். மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டைத்


மூன்றாம் திருநாள்!

 

 ‘‘அவனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க… படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்கட்டி யிருந்தார்கள். ‘‘இந்த வருஷம் மூணு நாள் கொடை போட்டு அசத்திரணும்டே…’’ என்று நாட்டாண்மை தாத்தா சொன்னதற்கு, எல்லாரும் தலையாட்டிவிட்டார்கள். அதில் முதல் நாள் இளைஞர் சங்கத்துக்குக் கொடுத்துவிடுவது என்று தீர்மானம் ஆகியது. பெரியவர்களைத் தொடர்ந்து கூட்டம் போட்ட இளைஞர்கள்அந்த திருவிழாவுக்கு


கடைசி வீட்டு ஆச்சி!

 

 ‘‘கடைசி வீட்டு ஆச்சி செத்துப்போயிட்டா..!’’ பேச்சிமுத்துவின் குரல் எங்கோ கடலுக்குள் இருந்து ஒலிப்பது போல மெலிதாகக் கேட்டது. என்னால் செய்தியை உள்வாங்க முடியவில்லை. சில கணங்களில் செய்தி உறைத்த போது அதிர்ச்சியாக இருந்தது! ‘‘எப்படியும் நாளைக்குச் சாயங் காலம் ஆகிடும் தூக்குறதுக்கு. நீ வந்துடுவியா?’’ என்றான். உடைந்த அவனுடைய குரலில் இருந்து எவ்வளவு நேரம் அழுதிருப்பான் என்று யூகிக்க முடிந்தது. ‘‘என்னடா கேக்கறே, உடனே வர்றேண்டா! டேய், கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் தூக்கிற வேண்டாம்னு சொல்லுடா. ஒரு


ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!

 

 யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இருளில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் குளிரைத் தாங்க வேண்டும் என்பதற்காகவும் கரிய நிற ராமசாமி காதை மறைத்து வெள்ளைத் துண்டைச் சுற்றியிருந்தான். ரொமானே தன்னுடைய துப்பட்டா வால் தலையை மூடியிருந்தாள். கைகளுக்குள் பொத்திய விளக்கு போல அந்த இருட்டிலும் ரொமானேவின் முகம் பளீரென்று ஜொலித்தது. குளிரின் மிகுதியால் ராமசாமிக்கு நெருக்கமாக வந்து நின்ற