ஒர் ஆணாதிக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 9,281 
 

தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான் கணேஷ்.இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்.அதனால் தனித்தனி தொழில் நடத்தினார்கள். கணேஷுக்கு கிண்டியில் மோட்டார் பாக உற்பத்தி தொழிற்சாலை. அவன் மனைவி தேவிக்கு அம்பத்தூாில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை.

அவர்கள் தொழில் வளர்ந்ததுபோலவே அவர்களுடைய மகள் திவ்யாவும் வளர்ந்து 5 வயதை எட்டிவருகிறாள். கோடம்பாக்கத்தில் ஒரு கான்வென்டில் யூ.கே.ஜா படிக்கிறாள். தேவி ஃபியட்டிலும், கணேஷ் கான்டசாவிலும் போய்வர திவ்யாவுக்காக மாருதியும் டிரைவரும் இருந்தனர்.

ஒரு மாலை தேவி நேரம் கழித்து வீடு திரும்பியபோது காரேஜில் மாருதி இருந்தது, கான் டசாவை காணோம். திவ்யா வந்துவிட்டாள், கணேஷ் லேட் போலிருக்கிறது என்று ஃபியட்டிலிருந்து இறங்கி ‘திவ்யா ‘ என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள். எப்போதும் கூப்பிட்டவுடன் வந்து அணைத்துக்கொள்ளும் குழந்தையைக் காணவில்லை. ஒரு வேளை மாடியில் இருப்பாளோ என்ற சந்தேகத்தில் மாடியேறப்போனபோது அருகிலிருந்த ஃபோன் அடித்தது. தேவி காது கொடுத்தாள். ‘மேடம், உங்கள் மகளை நாங்கள் பிடித்துவைத்திருக்கிறோம். இரவு ஏழரையிலிருந்து எட்டுக்குள் உங்கள் லேடஸ்ட் க்ளீனிங் பவுடர் ஃபார்முலாவை ஒரு ப்ாீஃப் கேஸால் வைத்து எஸ்டேட் மெயின் ரோடிலுள்ள 4வது கிலோமீட்டர் கல் அருகில் காத்திருக்கும் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்.உங்கள் ஃபியட்டை மைல்கல்லருகே நிறுத்தி 3 முறை ஹெட்லைட்டை மாற்றி மாற்றி அணைத்து

சிக்னல் தரவேண்டும்.பச்சைச் சட்டை அணிந்த ஒருவர் சூட்கேசை வாங்கிகொண்டு உங்கள் மகளை உங்களிடம் விடுவிப்பார். தவறினாலோ, போலிசுக்குத் தொிவித்தாலோ உங்கள் மகளை உயிருடன் ———— ‘

அதற்குமேல் கேட்கத் துணிவில்லை தேவிக்கு. ‘இப்பவே வறேன்,அவளை ஒன்றும் செய்துவிடாதீர்கள் ‘ என்று கெஞ்சினாள். தேவிக்கு நடுக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தன் கணவன் வருவதற்குள் தானே இதை சமாளித்துக் காட்டிவிடவேண்டும் என்ற சுதந்திர வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தாள். ஒரு சூட்கேசில் பேப்பர்களைத்திணித்து,சாிபார்த்து வெளியேறி ஃபியட்டிலமர்ந்து அம்பத்தூரை நோக்கி விரைந்தாள்.மணி அப்போது 7.45. 4வது கி.மீ.கல்லை சமீபித்து நின்று சிக்னல் காண்பித்தாள். ஒருவரையும் காணோம். திக்கென்றது.நாம் நேரம் தாழ்த்திவிட்டோமோ என்று கவலையில் மூழ்கினாள்.மணி எட்டாகி எட்டரையும் நெருங்கிக் கொண்டிருந்தது.கடத்தல்காரர்கள் கண்ணில் படவில்லை. அப்போதுதான் தன் கணவனிடம் சொல்லியிருக்கலாமோ என்று தோன்ற அவசரமாகக் காரைத்திருப்பி வீட்டை நோக்கிப் பறந்தாள். வீட்டை அடைந்து பரபரப்புடன் உள்ளே நுழைந்தவள் கீழ் ஹாலில் கணேஷும் திவ்யாவும் கேரம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தாள்.

‘ என்ன தேவி!மிரகிள் ஒன்றுமில்லை.நான் தான் போலிசுக்குத் தகவல் தந்து ஒரு பெண் இன்ஸ்பெக்டரை மஃப்டியில் வேறொரு ஃபியட்டில் அனுப்பிவைத்து சிக்னல் காட்டி கடத்தல்காரர்களைப் பிடித்து திவ்யாவையையும் மீட்டுவரச்செய்தேன்.இன்ஸ்பெக்டர் இப்பத்தான் போனார்.நல்ல வேளை, கான்டசாவை ாிப்பேருக்குக் கொடுத்துவிட்டு டாக்சியில் வீடு வந்து நான் மாடியறையில் நுழைய நீயும் பின்னாலேயே வந்திருக்கிறாய்.டெலிஃபோன் மணி அடித்ததும் கீழ் கனெக்ஷனை நீ எடுத்த அதே சமயத்தில் மாடி கனெக்ஷனை நான்

எடுக்க, உங்கள் பேச்சு என் காதில் விழ, நீ கிளம்பியவுடன் நான் அம்பத்தூர் போலீசுடன் தொடர்பு கொண்டு வேலையை முடித்துவிட்டேன். நீ மிகவும் பயந்திருப்பாய்.ரெஸ்ட் எடுத்துக்கொள். ‘ என்று நடந்ததை விவாித்த கணேஷ் ‘ கமான், காம் டெளன் டியர் ‘ என்று மனைவியை அணைத்துத் தேற்றினான்.

‘சுதந்திரம் மட்டும் போதாது, தந்திரமும் வேண்டும் ‘ என்பது இப்போது தேவிக்குப் புாிந்தது.

– மார்ச் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *