கதையாசிரியர் தொகுப்பு: சி.மதிவாணன்

30 கதைகள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் நாடெனும் போதினிலே..

 

 பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை முடித்திருந்தான். இன்னும் போதை போதவில்லை. அம்மாவிடம் பிடுங்கிக்கொண்டு வந்திருந்த 100 ரூபாயில் 75 ரூபாய் சரக்குதான் வாங்க முடிந்திருந்தது. 65 ரூபா சரக்கை 75 என்று விற்றுக் கொண்டிருந்தார்கள் பாவிகள். வாட்டர் பாக்கெட்டும் காலியாகியிருந்தது. கொறித்த பயிரும் காலியாகியிருந்தது. கரட்டுப்பட்டியின் டாஸ்மாக் பார் மின்வெட்டில் இருண்டிருந்தது. ரீசார்ஜ் லைட்தான் போட்டிருந்தார்கள். அது அழுதுகொண்டிருந்தது. இவனோ தன்னை


உயிர் வெட்டு

 

 எனது லேப்டாப்புக்கான பேட்டரியை நான் வாங்கியபோது மின்சாரம் போய்விட்டது. கடைக்காரர் என் நண்பர்தான். அவர் சிறு அளவில் கம்யூட்டர் வணிகத் தொழில் ஆரம்பித்தபோது அவரின் இளவயது காரணமாக அவருக்கு ஆதரவு அளித்தேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும், எனது தொடர்புகளை அவரது வாடிக்கையாளர்கள் ஆக்கிவிடுவதைத் தவிர? அதற்காக என்மீது கொண்ட மரியாதையால், இரண்டு தவணையில் தருவதாக சொன்ன என் வார்த்தையை ஏற்றுக்கொண்டு லேப்டாப் பேட்டரியை பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் கொடுத்துவிட்டு கிரடிட் பில் கொடுத்தார். அவர்


இருளாகும் வெளிச்சங்கள்

 

 சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால், அவளுக்கு ஆசையாக இருந்தது. மஞ்சள் பொட்டு போதும் என்று முடிவு செய்து புறப்பட்டாள். செல்லப்பாண்டி வருவான். பாலமேடு போகும் சாலையில் நான்கு மணிக்குத் காத்திருப்பான். அவன் தண்டல் வசூல் செய்யப் போகும் வழி அதுதான். பாலமேட்டை முடித்துவிட்டு அப்படியே அலங்காநல்லூர் வழியாக மதுரை போய்ச் சேர்வான். இவளுக்குப் பயமாக இருக்கும். இப்படி பைக்கில் சுத்துகிறானே? எத்தனை


மகளிர் காவல்

 

 அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத் தோன்றியது மகாவுக்கு. குபுக்கென்று கண்ணில் நீர் வந்தது. ‘போடி.. போயி வெளியில ஒக்காரு’, என்ற எஸ்ஐயின் குரல் கேட்டதுதான் தாமதம், மகா கால்கள் தள்ளாட வெளியேறினாள். ஸ்டேஷனுக்கு வெளியே அரச மரமிருந்தது. அதன் நிழலில் பிள்ளையார் சிலையிருந்தது. அப்படியே உட்கார்ந்தவள் கண் மூடிக்கொண்டாள். தலையை கால் முட்டிகளின் இடையே பதித்துக்கொண்டாள். கட்டியிருந்த புடவை இல்லாததுபோல இருந்தது.


தின்று தீர்க்கும் இருள்

 

 கையில் பத்து ரூபாய்தான் இருந்தது. ஆனால், அவள் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள். ஊருக்குப் போய்விட வேண்டும். ஊருக்குப் போயேத் தீரவேண்டும். அந்த நகரத்தின் இயக்கத்தை வாகனங்களின் சப்தம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. தலைக்கு மேலே மெர்க்குரி விளக்கு மஞ்சள் குடை விரித்திருந்தது. இந்த அலங்காரமெல்லாம் அவளின் கிராமத்தில் கிடையாது. தெருவுக்கு ஒரு டியூப் எரிந்தால் அது ஆச்சரியம். நெடுஞ்சாலையில் இறங்கி ஊரை நோக்கி நடக்கும்போது இருட்டுக் குகைக்குள் பயணப்படுவதுபோல இருக்கும். காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் காதைத்


கொள்ளை

 

 ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில் வலி பொறுக்கமுடியவில்லை. எழலாம் என்றாலோ காலும் இடுப்பும் ஒத்துழைக்கவில்லை. கைகளைத் தரையில் ஊன்றி எழப்பார்த்தாள். அடிவயிற்றுக்கும் கீழே வலித்தது. அந்த இடத்தில் அரிப்பெடுத்தது. நசநசவென்றிருந்தது. பாழாய் போன வெள்ளை மறுபடியும் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள். ஈஸ்வரிக்கு வயது முப்பத்தியைந்துதான். ஆனாலும் அவளைப் பார்க்கும் யாரும் அவளை நாற்பது நாற்பத்தைந்து வயதுக்காரி என்றுதான் நினைப்பார்கள். காதோரத்தில் கனத்த


பாலையில் பெய்யும் மழை

 

 அவன் கதவைத் திறந்தது இவளுக்குத் தெரிந்தது. இவள் தூங்கவில்லை. இன்று மட்டுமல்ல… பல நாளாகத் தூங்கவில்லை. வாழ்க்கை இப்படி ஆனது பற்றி யோசித்து யோசித்து இவளுக்குத் தூக்கம் வரவில்லை. வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த இரண்டு மாத பிள்ளை பற்றிய கவலையில் தூக்கம் வரவில்லை. பெரியவளும், சின்னவனும் இவளுக்கு அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் படுத்திருந்தனர். பெரியவள் வயதுக்கு வந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டிருந்தாள். கதவு என்ற பெயரிலான கீற்றுத் தட்டியை அவன் திறந்தவுடனேயே இவள் கண்ணை மட்டும் திறந்து


சொல்ல முடியாத பிரச்சனை

 

 காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள் அடைத்து வைத்ததெல்லாம் வெளியேறும் நேரம் அது. அவளது வீட்டில் கீற்றால் அடைத்த மறைப்பு உண்டு. அங்குதான் குளிப்பாள். அது மாலை ஆறு மணிக்கு. அப்போதுதான் கீற்று முடையும் வேலை முடியும். கருவை மரத்தின் கீழே அவளும் இன்னும் சில பெண்களும் கீற்று முடைவார்கள். எரிக்கும் வெயிலுக்கு கருவை உதவாது. வேர்த்துக் கொட்டும். ஆனால், அதுதான் வீட்டின்


சாதி கெட்டவன்

 

 இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது. இருந்தாலும் இன்றாவது, எழுதியே ஆக வேண்டும். அப்போது நான் சின்னப் பையன். எங்கள் ஊரின் வயல் வரப்பின் வழியாக நடக்கும்போது பயமாக இருக்கும். மேலே உள்ள வானத்தைத் தவிர எதுவும் தெரியாது. நெல்லின் பெயர் ஏதோ கார் என்று சொல்வார்கள். எனக்கு சரியாக நினைவில்லை. அப்புறம் பள்ளி செல்லும் எனக்கு, இலகுவான பெயர் உள்ள நெல்


ஓர் ஆணும் ஒரு பெண்ணும்

 

 சென்னைக்கு வெகுநாள் கழித்துச் சென்றேன். அங்குதான் நான் பல வருடங்கள் குடியிருந்தேன் என்றாலும் என்னால் சென்னையை என் ஊர் என்று சொல்லமுடியாது. இந்த சப்தம், எங்கு பார்த்தாலும் தெரியும் அவசரம், கட்டிடங்கள், அழுக்கு, மினுக்கித் தெரியும் படித்தவர்கள், இன்னபிற.. இது மனிதர்களுக்கான நகரம் இல்லை. யந்திரமாக மாறிவிட்டவர்களுக்கு அல்லது மாறத் தயாராக உள்ளவர்களுக்கான நகரம். காலம் முழுவதும் ஒரு பைசா சேர்க்கக் கூட திட்டமிடாத என்போன்ற ஏமாளிகளுக்கான நகரம் அல்ல. ஆனால், என் பெண் இங்குதான் குடியிருக்கிறாள்.