கதையாசிரியர் தொகுப்பு: சிவனார் செல்வன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

சுப்பனின் சுழற்பயணம்

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுப்பன் என்பவன் மணலூருக்கு வந்து தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று அவ்வூர் கிராம அதிகாரியிடம் கேட்டான். அவரும் “நீ தனியாள். காலியாக உள்ள காளி யண்ணனின் வீட்டில் இருந்து கொண்டு இவ்வூரில் நாலு வீடுகளில் வேலை செய்து பிழைத்துக் கொள்” என்றார். சுப்பனும் காளியண்ணன் வீட்டிற்குப் போய் “ஐயா! கிராம அதிகாரி உங்கள் வீட்டில் இருந்து கொண்டு இவ்வூரில் வேலை தேடிக்


தேவையானதைக் கொடு!

 

 மாளவ தேச மன்னன் மகாசேனன் ஒரு நாளிரவு மாறு வேடத்தில் நகரில் திரிந்து வந்த போது ஓரிடத்தில் ஒருகல்லில் பட்டு இடறிக் கீழே விழுந்துவிட்டான். தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அங்கு அருகிலிருந்த ஒரு குடி சையில் வாழும் ஏழை மனிதன் பார்த்து ஓடி வந்து அவனைத் தூக்கி ஒரு மரத்தடியேகொண்டு சேர்த்தான். அதன்பின் தனக்குத் தெரிந்த பச்சிலை களைப் பறித்து வந்து அவற்றின் சாற்றை மன்னனின் காயங்களில் தடவினான். மன்னனின் காயங்களின் எரிச்சல்


உயர்ந்த மதிப்பு

 

 முருகனும், செந்திலும் மணலூரில் இருக்கும் இரு நண்பர்கள். அவர்கள் அவ்வூரில் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை வறட்சியால் அப்பகுதி வாடவே நண்பர்களிருவரும் பட்டணத்திற்குப் போய் பணம் சம்பாதிக்க நினைத்து தம் ஊரைவிட்டுக் கிளம்பிச்சென்றார்கள். பட்டணத்தில் இருவருக்கும் நல்ல வேலைகள் கிடைத்தன. இருவரும் நிறையச் சம்பாதித்துச் சேர்த்தும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செந்தில் தன் நண்பனிடம் “நம் ஊருக்குப் போய் நம் அந்தஸ்து உயர்ந்ததைக் காட்டவேண்டும்” என்றான்.


இது வியாபாரம்!

 

 மணலூரில்‌ மாரிசாமி என்பவன்‌ மளிகைக்‌ கடை வைத்து வியாபாரம்‌ செய்து வந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நேர்மையானவன்‌. அதனால்‌ உள்ளதைச்‌ சொல்லி சாமான்களை விற்று வந்ததால்‌ அவனுக்கு நிறைய லாபம்‌ கிடைக்கவில்லை. கிடைக்‌கும்‌ லாபமோ குடும்பத்தை நடத்‌தக்‌ கூடப்போதுமானதாக இருக்கவில்லை. அவன்‌ தன்‌ கடையில்‌ வேலையாள்‌ யாரையும்‌ அமர்த்திக்‌ கொள்ள முடியாமல்‌ தன்‌ மகன்‌ தங்கப்பனையே உதவிக்கு வைத்துக்‌ கொண்டான்‌. தங்கப்பன்‌ தன்‌ தந்தையிடம்‌ “என்னப்பா இது! வியாபாரம்‌ சரியாக. நடப்பது இல்லையே. நம்‌ குடும்பச்‌ செலவுக்குக்‌ கூடப்‌


புலியால் புதுமணம்

 

 ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில் போய் வேட்டையாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை தன் பரிவாரங்களோடு காட்டிற்கு வேட்டையாட அவன் சென்றான். அவன் சில மிருகங்களை வேட்டையாடி விட்டு ஒரு மரத் தடியே தங்கினான். ஓரிரு நிமிடங் களுக்குப் பின் அந்த மரத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு புதரில் ஏதோ சந்தடி ஏற்பட்டது. அவன் என்ன வென்று திரும்பிப் பார்ப்பதற்குள்