கதையாசிரியர் தொகுப்பு: சிவசித்திரை

4 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளையடித்த வாசனை

 

 ஐப்பசி, கார்த்திகை, மார்கழியென்று மாதம் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டு இருக்கும். வயிற்றுப் பசிக்குப்போக, தினந்தினம் செலவுகள் என்று காசு கரைந்து கொண்டே இருக்கும். அப்படி இப்படியென்று சேர்த்த காசில், பொன்னென்றும் பொருளென்றும் வாங்க முடியாது. அதற்குள் பண்டிகைக் காலம் வந்துவிடும். கிராமத்து மனிதர்களிடம் சொத்தென்றும், சேர்த்த காசென்றும் எதுவும் இல்லை. உடம்பும் உழைப்பும்தான் அவனுக்கு அடையாளம். ஆனாலும், கிராமத்து மனிதர்கள் பண்டிகையையும், திருவிழாவையும் அனுப விப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடுவதே இல்லை. கைமாற்று அல்லது கடன் வாங்கியாவது, அதை


அடுப்பங்கரை

 

 வாழ்வின் சாரம் ஓர் ஓரமாய் கசிந்துகொண்டு இருந்தது. பொழுதின் முடிவு, கீழ்வானம் கறுப்பானது. மழை வருவதற்கான பச்சை மண்வாசம் அடித்தது. காற்று தன் வேடத்தைத் தரித்துக்கொண்டது. மேற்கே வீசுகிற காற்று, ஊருக்குள் புகுந்தது. அக் கணத்தில் மட்டும், அது தனக்கான முகத்தை வெளிக்கொணர்ந்தது. சுழன்று சுழன்று வீசியது. மண்ணும் மரம் மட்டைகளும் பயம்கொண்டன. தெருவெங்கும் குப்பைக்கூளங்களைப் பரவலாக்கியது. கொடிக்கம்பங்களை உடைத்துக் கீழே தள்ளியது. ஆடு மாடுகள் கொட்டகைகளிலும் வீட்டுத் திண்ணைகளிலும் ஒதுங்கின. தெய்வானை வீடு திறந்தே கிடந்தது.


பனங்காட்டுப் பத்திரம்

 

 ஆடி மாசக் காற்று ஈவு இரக்கம் பார்க்காது. சனங்கள் தெருவில் நடமாட முடியாது. ஊரிலுள்ள மண்ணையெல்லாம் முகத்தில் வீசியடிக்கும். ஊரையே ஒரு வழி பண்ணாமல் விடாது. எப் பேர்ப்பட்ட மரமாக இருந்தாலும் கூட, தலை கனத்துவிட்டால் மண்ணில் சாய்த்துவிடும். அப்பேற்பட்டது ஆடி மாசக் காற்று. ஆனால், பனைமரம் அப்படியல்ல! எத்தகைய காற்று மழைக்கும் அசையாமல் நிற்கும். இன்றைக்கு வீசுகிற காற்றோ பனைமரத்தையே ஒரு கை பார்க்கிறது. பனங்காட்டுக் குருவிகளெல்லாம் தப்பித்தோம்… பிழைத்தோம் என்று ஓடுகின்றன. என்றைக்கும் இல்லாத


அப்பாவி முனீஸ்வரன்

 

 காலம் அவனுக்குத் தீராப் பகையானது. வெகுநாட்களாக் காத்திருக்கும் போல! தக்க தருணத்தில் பழிதீர்த்தது. வசமாக மாட்டிக்கொண்டான். அவனுக்கும் வாழ்வுக்குமான உறவே அறுந்துபோனது. பிடிமானம் என்பதே இல்லாதிருந்தது. அப்பன், ஆத்தா உயிரோடு இல்லை. இருந்திருந்தால், குடிக்கக் கஞ்சியாவது இருந்திருக்கும். அவன் ஆத்தா ‘முனி’ சாமியை நினைத்து, அவனுக்கு முனீஸ்வரன் என்று பெயரிட்டாள். ‘முனி வீரமுள்ள சாமி. ஈவு, இரக்கம் பார்க்-காது. ஒரே அடியாக அடித்துவிடும். பொல்லாச்சாமி’ இப்படியெல்லாம் கதை சொல்வார்கள். ஆனால், இவன் அப்படி இல்லை. கோழை. அப்பன்,