கதையாசிரியர் தொகுப்பு: சிலோன் விஜயேந்திரன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

நீதி நின்று கொல்லும்

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊரில் அவனே ராஜா; அவன் இட்டதே சட்டம்; அராஜகமே அவன் ஆட்சி முறை. ஏழை மக்கள் அவனால் சொல்லி முடியாத கஷ்டம் உற்றார்கள். “எத்தனிவன் ஒழியும் நாளே எமக்கின்ப நாள்” என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். அந்த ஊரிலே வசித்த அழகிய இளம் பெண்கள் ஆயி ரம் தெய்வங்களிடம் அழுது புலம்பியும் முதல் தர லீலா விநோதனான அவ்வூர் மன்னனின் பார்வையிலிருந்து தப்ப


மதன மமதை

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிருஷ்டி கர்த்தனான பிரமனுக்கு வானலோகத்து அழ கரசனான் மதனனின் போக்கிலே வெறுப்பு விளைந்தது. “ஏ ரதியே! என் அழகு எவருக்குமே இல்லையடி” இப்படி மதனன் தன் மனைவியிடம் மட்டும் பெருமை அடித்துக்கொண்டிருப்பானேயாகில் நிச்சயமாகப் பிரமனுக்கு அவன்பால் வெறுப்பு ஏற்பட்டிருக்க முடியாது. பெண்டாட்டியிடம் தன் பிரதாபங்களைப் பீற்றிக் கொள்ளாத ஒரு ஆண்மகனை, பிரமன் மூவுலகிலெங்கணுமே இன்னமும் படைக்கவில்லையே! விஷயம் அதுவல்ல; “மதனன் தானே நிகரற்ற


ராஜகுமாரியின் ஆசை

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உதய ராஜ்யத்தைச் சேர்ந்த ராஜகுமாரி தேவிக்கு நெஞ்சிலே ஒரு ஆசை நிறைவேறாது நெடுநாட்களாய் அனல்மூண்டு கிடந்தது. அவளைப் போன்ற கன்னி ரோஜாக்கள் எல்லாம் வதுவை புரிந்து மகிழ்ச்சி மிகமேவ நாயகரோடு, நன் மக்களோடு களித்திருக்கையிலே, பாவம் அந்த ராஜகுமாரி மட்டும் காலத்துக்கே சவால் விட்டு நிற்கும் தனது திவ்ய யௌவனத்தோடு பருவப்பற்றுக் கோடற்றுப் பதைத்துக் கிடந்தாள். “ஒரு நாட்டின் ராஜகுமாரி! அவளுக்குத் திருமணம்


விஜயா

 

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்வ சாதாரண குடியானவர்களையே மிகுதியர்கக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு, மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்த மகா நுபாவர்களை எத்துணை பாராட்டினாலும் தகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தத் கிராமத்து மருத்துவமனைக்கு உண்மையான தொண்டு மிக்க ஒரு டாக்டரோ – ஒரு நல்ல தாதியோ வந்தமையவில்லை. மிக நீண்ட காலமாக நிலவி வந்த இந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக நேர்த்தியான ஒரு தாதி மட்டும், வரப்பிரசாதம்போல்


பாதை

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குமாரசாமி மாஸ்டர் அற்புதமான சங்கீத ஞானம் மிக்கவர். கர்நாடக இசையென்றாலுஞ் சரி, ஹிந்துஸ் தானி இசை என்றாலுஞ் சரி, மெல்லிசை என்றாலுஞ் சரி அவை எல்லாம் அவருக்கு மிக அற்புதமாகக் கைவரும். சங்கித பூஷணம் என்றும், சங்கீதத்தில் டிப்ளோமா என்றும் சோடிவிக்கட்டுகள் பெற்ற மிகப் பலர் எவ்வித கலாஞானமும் அற்ற ஞான சூனியர்களாகவே இருக்கிறார்கள். எந்தத் துறையிலுஞ் சரி ஒருவனுக்குக் கலாஞானம் என்பது


ஆத்மாவை அபகரித்தவன்

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனிய மாலை வேளைகளிலே யாழ் நகர் வீதிகளில் அவன் வேகமாகச் சைக்கிள் ஓட்டிச் செல்லும் அழகை நான் ரசிப்பதுண்டு. அது ஒரு இன்ப அனுபவம். அவன் முகத்திலே எப்போதும் சம்பூர்ண சௌந்தர்யம் குடி கொண்டிருக்கும். கரிய நீண்ட மயிர் பாதி நெற்றியை மறைக்க, அழகிய கண்கள் ஒளிவீச, கூர்மையான மூக்குத் தனிச் சிறப்பைக் கொடுக்க, உதடுகளோ பார்ப்பவர்களுக்கு அவன் எப்போதும் புன்னகைப்பவனோ என்னும்


ஒருத்தியின் நெஞ்சம்

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கௌரி உன்னைப் பெண் பார்ப்பதற்கு வருகிற திங்கட்கிழமை ஒருவர் வருவார்.” கௌரியின் அண்ணா துடிப்போடு தான் சொன்னான். ஆனால் கௌரிக்கு அந்தச் செய்தி எத்தகைய இதய எழுச்சியையும் ஏற்படுத்தவில்லை. அவளின் இருபதாவது வயதில் தொடங்கிய இந்தத் திருமண ஏற்பாடுகள் இப்போது அவளுக்கு முப்பத்தொரு வயதாகப் போகிறது – இன்னமுந்தான் முடிந்த பாடில்லையே. அழகிய மலர்களைப்போல் ஆயிரக்கணக்கான பருவக் கனவுகள் கௌரியின் நெஞ்சிலும் அரும்பத்தான்


துருவநட்சத்திரமும் துடிக்கின்ற சொப்பனங்களும்

 

 (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனனி என் ஆத்மபீடத்தே அன்பின் சுடர் கொளுத்திய ஒருத்தி. அவள் நினைவுகள் என் உணர்வின் கவிதை. ரவிராஜா கிழக்கே விடிவின் கதிர் விரித்த ஒரு காலயிலே என் ஜீவநாயகி மரணதேவதையைச் சரணடைந்தாள். சமுத்திரக்கன்னியின் ஓயாத இதய ராகங்கள் அலை ஓசையாய் ஆர்ப்பரிப்பது போல் ஜனனியின் நினைவுகள் என் நெஞ்சில் சாஸ்த சங்கீதம் பாடுகின்றன. அவள் நினைவுகளை என் பாஷை பூசை செய்கிறது. உண்மையில்


கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள்

 

 1 ஒரு சமயம் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை செல்வந் தரான தமது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றார். புலவர் சென்ற போது அந்த நண்பர் வீட்டினுள் இருந்து உணவு உண்டு கொண்டிருந்தார். ஆதலினால் அந்த நண்பரின் மனைவி தான் புலவரின் கண்ணில்பட்டார். அந்த அம்மையாருக்கு வந்தவர் தான் கல்லடி வேலுப் பிள்ளை என்று தெரியாதிருந்தது. மிக எளிய கோலத்தில் காட்சி தந்த புலவரை அந்த அம்மையார் தரக் குறைவாக மதிப்பீடு செய்து விட்டார். வீட்டினுள்ளே போன அந்த