கதையாசிரியர் தொகுப்பு: சிறீநான்.மணிகண்டன்

1 கதை கிடைத்துள்ளன.

இரண்டு பிம்பங்களாலான உலகம்

 

 கண்ணாடியில் இரண்டு பிம்பங்கள் தெரிந்தபோது ஆசாரிக்கு வியர்த்துவிட்டது. இரண்டில் எது வழமையானது எது புதிதாகத் தோன்றியது என்பதை அவனால் பிரித்தறிய இயலவில்லை. கண்களைக் கசக்கித் துடைத்துக்கொண்டு பார்த்தான். மீண்டும் இரண்டு பிம்பங்கள் தெரிந்தன. கண்ணாடியில் ஏதேனும் கீறல் விழுந்திருந்ததா எனத் தடவினான். அவ்வாறு இல்லை. கண்ணாடியிலிருந்த பழுப்பு நிறப் புள்ளிகளால் அவ்வாறு தோன்றக் கூடும் என நினைத்து மண்சுவரில் பதிந்திருந்த கண்ணாடியைப் பெயர்த்தான். நாற்புறமும் சட்டங்களற்ற கண்ணாடியின் பின்புறம் ரசமற்று வெளிறிக்கிடந்தது. ஆசாரி கண்ணாடியை முன்னும் பின்னுமாய்த்