கதையாசிரியர் தொகுப்பு: சபிதா

2 கதைகள் கிடைத்துள்ளன.

முள்

 

 அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ? ”சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.” ”ம்மா… நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் ‘அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு’னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப… இப்பவுமா?


என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும்

 

 இருபது வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது மனம். மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின் வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன் அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ… நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப் போலத்தான். தொலைவில்