கதையாசிரியர் தொகுப்பு: சங்கர் கோட்டாறு

2 கதைகள் கிடைத்துள்ளன.

சமூக தண்டனை

 

 அந்த பேரூந்தில்; ஆறு மிருகங்கள்; ஒரு பூவையிடம் வெறித்தாண்டவமாடி, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் பிணமாகிப்போன,… அந்த கோரசம்பவத்தின் முழுநீள விளக்கமான ‘ரிப்போர்ட்’ தயாரிக்கும் பொறுப்பு ‘இன்வெஸ்டிகேட்டிவ்-ஆபீஸ’ரான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பயணிகள் பேரூந்தென்று நம்பி ஏறிய தப்பைத் தவிர வேறொன்றும் செய்யாத அந்த இளம்பெண் பட்ட அவஸ்தையை, சித்ரவதையை ‘பாக்கிஸ்தான்’ வசம் சிக்கிக்கொண்ட இந்திய இராணுவவீரன் கூடபட்டிருக்க மாட்டான். கற்பழிக்கப்பட்ட பிறகு அடிவயிற்றிலும், தொப்புளிலும் இரும்புக்கம்பியைத் திருகி ஏற்றி…….நினைக்கவே கடினமாக இருந்தது. என்னால் ரிப்போர்ட் எழுத முடியவில்லை. நரம்பெல்லாம் முறுக்கேற,


பெரியப்பா

 

 எனது தந்தையைவிட ஐந்து வயது மூத்தவர், எனது பெரியப்பா. ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர். எச்சில் கையால் கூட காக்கை விரட்டாத ஜாதி. அவருக்கு நல்ல வருமானம் இருந்தது. அரசு வேலை தவிர பெரியம்மாவீட்டு சீதனமாக வயலும்,தோட்டமும் இருந்தது. நல்ல வசதியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு அடுத்தடுத்தாக மூன்று பெண்குழந்தைகள் பிறந்தனர். ஓவ்வொருமுறை குழந்தை பிறக்கும் போதும் அடுத்த முறை ஆண்குழந்தை பிறக்கும் என்று கட்டுப்பாட்டை தள்ளி வைத்து வந்தவர், மூன்றாவதும் பெண்குழந்தை பிறக்க, குடும்பக்கட்டுப்பாட்டை