கதையாசிரியர் தொகுப்பு: க.சுமதி

1 கதை கிடைத்துள்ளன.

மெய்ப்பட வேண்டும்…

 

 ‘இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு பலமுறை நான் வந்திருக்கிறேன். இதனுடைய பிரமாண்டம் அப்போதெல்லாம் என் மனதில் படிந்ததே இல்லை. தான் உடுத்தியிருக்கும் உடையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், என்னை மட்டும் அற்புதமாக அலங்காரம் செய்து, இதே அரங்கத்துக்கு அழைத்து வருவார் அப்பா. அந்த மிகப் பெரிய கூட்டத்தில், நான் தனியாகத் தெரிவேன். அப்பா சொல்வார், ‘டேய் ஒருநாள் இந்த மேடையிலும் நீ தனியா