கதையாசிரியர் தொகுப்பு: கே.கணேசன்

1 கதை கிடைத்துள்ளன.

‘செல்’லாத காதல்

 

 செல்போன் கடையைத் திறந்து தூசி தட்டி ஒழுங்கு செய்தான் குமார். பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்துத் தலை சீவி, கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான். இன்று மஞ்சு கட்டாயம் வருவாள். முழுப் பெயர் மஞ்சுளாதேவி. நேற்று மாலை கடைக்கு வந்தாள். தினமும் நேரம் தவறாமல் அந்த வழியாகத்தான் ரொம்ப நாளாகப் போய்க்கொண்டு இருக்கிறாள். காதோடு ஒட்டியபடி இருக்கும் செல்போனில் கிசுகிசுத்தவாறே கடந்துவிடுவாள். நேற்று வந்தவள், ”பேசிக்கொண்டு இருக்கும்போதே லைன் கட்டாகிவிடுகிறது” என்று கையில் இருந்த செல்போனைக் காண்பித்தாள். அவன்