கதையாசிரியர் தொகுப்பு: கேசவமணி

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவின் புத்தக அலமாரி

 

 காலையில் கண் விழித்ததும் அசதியாக இருந்தது. இரவெல்லாம் சரியாக உறக்கம் இல்லை. விழித்திருக்கிறேனா இல்லையா என்று தெரியாத ஒரு மயக்கநிலையிலேயே இரவு கழிந்துவிட்டது. ஏதேதோ கனவுகள் வேறு. உடல் வலியைவிட மன அசதியே பெரிதும் இருந்தது. அனு பக்கத்தில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். இந்திரா முன்னதாகவே எழுந்துவிட்டாள். எப்போதுமே அவளுக்கு தினம் சீக்கிரமே விடிந்துவிடுகிறது. எனக்கோ நேரமாக எழுந்திருப்பது என்றாலே மிகச் சிரமமான காரியம். காலை நேரத்தின் ஓசைகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. எனக்கோ இரவின் ஓசைகள்தான்