கதையாசிரியர் தொகுப்பு: கு.காமராஜ்

1 கதை கிடைத்துள்ளன.

கழுத்தறுத்தான்

 

 “அட… எவ்வளவு பெருசா இருக்கு.. ஒரு வான் கோழி அளவுக்கு இறைச்சி வரும் போல இருக்கே..” கழுத்தில் முடி இல்லாமல் கொழு கொழுவென்று ஓடித்திரியும் அந்தக் கழுத்தறுத்தான் சேவலைப் பார்ப்போரில் பெரும்பாலானோர் உதிர்க்கும் வார்த்தைகள்தாம் இவை. ஆனால் அப்படிச் சொல்பவர்கள் மீது கடுமையாக ஆத்திரப்படுவான் அமுதன். காரணம் அவனைப் பொறுத்தவரையில் அந்தக் கழுத்தறுத்தான் சேவல் ஒரு செல்லப் பிராணி. விடியற்காலையில் கதவைத் திறக்கும் பொழுது பெரும்பாலும் அமுதனின் கண்ணில் முதலில் தென்படுவது கழுத்தறுத்தானாகத்தானிருக்கும். அவனைக் கண்டதும் ஓடிவந்து