கதையாசிரியர் தொகுப்பு: கீரனூர் ஜாகிர்ராஜா

1 கதை கிடைத்துள்ளன.

கலைத்து எழுதிய சித்திரம்

 

 அன்றைக்குக் காலை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் உலகம் புத்தம் புதிதாக விடிந்திருப்பதுபோலத் தோன்றியது. சமூகத்தின் பெரும்பான்மை இளைஞர்களையும் போலவே நானும் வளைகுடா நாடு ஒன்றில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். அதிகமில்லை, சரியாக இரண்டே வருடங்கள்தான். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊரின் முகம் மாறியிருந்தது. நெருங்கிய நண்பர்களில் சிலர் திசைக்கொரு பக்கம் பிரிந்திருந்தனர். ஒருவன் திருமணமாகி குடும்பஸ்தன் ஆகியிருந்தான். அவனிடம் பேச எனக்குவார்த்தைகளே கிடைக்கவில்லை. கிடக் கட்டும்! புயலடித்தாலும்