கதையாசிரியர் தொகுப்பு: கி.நடராசன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

நம்மாழ்வார்கள்

 

 கொத்து கொத்தாகப் பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் நிழல்தந்த அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டு கிடந்தது. கடைசியாய் வாசம் நிறைந்த அந்த பூக்களின் தேனை மின்மினிப்பூச்சிகள் உறிஞ்சிக் கொண்டிருந்தன. அதன் அருகே ஆறடி நீளமான மனைப்பாம்பு நசுக்கப்பட்டு மல்லாக்காய் புரட்டப்பட்டுச் செத்து கிடந்தது. அதன் சதைகளை பிய்த்து தின்ன எறும்பு கூட்டங்கள் முயன்று கொண்டிருந்தன. அந்த இரவில் இவைகளை பார்த்த கண்ணுசாமி பேயறைந்தது போன்று அலறினார். அவரின் மனைவி கைத்தாங்கலாக சேர்த்து அணைத்து


ஒய்யாரச் சென்னை

 

 தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல் விளக்குகளால் சீவி சிங்காரித்து மினுக்கி குலுக்கிக் கொண்டிருந்தது. அந்த குலுக்கலும், மினுக்கலும் அதிகாலை கதிரவன் வெளிச்சம் பரப்பிய பின்பும் கூட அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.. இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய சில நூறு நபர்களிடம் இருக்கும் நான்கு விலைஉயர்ந்த அடி அதிநவீனக்கார்கள் சில நிமிட இடைவேளைகளில் சென்னை மாநகரின் மையத்தில் நட்ட நடுசாலையில் நின்று கொண்டிருந்த பெரும்


ஆன்மாக்களின் கல்லறை

 

 ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை நகரின் மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளாய் இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் ரோபோட்கள் அதன் உள்ளும் புறமும் இருந்து கொண்டு அதனை இயக்கின. என்னையும் சேர்த்து சில மனிதர்களை கூண்டு வண்டியில் அடைத்து அந்த இயந்திரத்தின் முன் இழுத்து வந்தன. அந்த இயந்திரம் தனது பெரிய வாயை கர்ர…கரவென்ற இரும்பு உரசும் இரைச்சலுடன் திறந்து திறந்து


பய – பக்தி

 

 குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி மேன்சன் பேச்சலர் வாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட மனசு இடம் தராது. சாம்பாரில் மிதக்கும் ரத்னா கபே இட்லிகள், ரசம், சாம்பார், மோர் என்று எதை ஊற்றினாலும் குழைத்துப் போகும் காசி வினாயகா மெஸ் சாப்பாடு, மூக்கைத் துளைக்கும் முனியாண்டி மெஸ், ஒரிரு முறைகள் மணக்கும் பீப் பிரியாணி-சுக்கா வருவல்


டீலக்ஸ் பொன்னி

 

 இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு போதும். தேக்கரண்டிகள் அளவுகளுக்குள் அடங்கிவிடும் நான்கு வகையான சட்னி, துவையல், சாம்பார் என்று அனைத்திற்கும் சேர்த்து மூலப்பொருள், உற்பத்தி செலவு எல்லாம் சேர்ந்து அதிக பட்சமாய் போட்டால் கூட ரூபாய் பத்திற்குள் அடங்கி விடும். நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தனது அம்மாவைப் பார்க்க பிள்ளைகளுடன் மனைவி சென்றாள். காலை சிற்றுண்டி சாப்பிட வேதா வந்திருந்தபொழுது இவ்வாறு கணக்கு


கொடிதினும் கொடியது

 

 கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டும் ஆங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கிக் கிடந்தது. ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தை குட்டிகளுடன் ஆண்கள், பெண்கள்


துள்ளும் கவிதை

 

 தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும் தனது கவிதைக்காக இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தான். ஊற்றெடுத்து பிரவாகமாகப் பொங்கி வராமல் எழுத்துகளும், வரிகளும் முக்கி முணகிக் கொண்டிருந்தன. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். இவனும் மனைவியும் மட்டும் தான் வீட்டில் இருந்தனர். கவித்துவ சூழலில் கவிஞனின் வீடு அமைந்திருந்தது. இன்னமும் பனிமூட்டம் விலகவில்லை. தரையிலிருந்து ஒராள்


தெருநாயும் போலிஸ்நாயும்

 

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டுமே அங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கி கிடந்தது. ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தைக் குட்டிகளுடன் ஆண்கள், பெண்கள்


ஒரு துளி கண்ணீர்

 

 அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக அவர் நினைவுகள் திரும்பத் தொடங்கின. வலியில் லேசாக முனகினார். கண்கள் மெல்ல திறந்து பார்த்தார். தான் எங்கு உள்ளோம் என்பதை அவதானிப்பதாக அந்த பார்வை இருந்தது. பத்தடி இடைவெளியில் அங்காங்கே சுவரை பார்த்த வண்ணம் சிலர் அமர்த்தப்பட்டு இருந்தனர். பயம், பரிதாபம், கருணையுடனும் மற்றும் சில கேள்விகளுடனும் அவர்கள் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தனர்.


தத்தனேரி சுடுகாடு

 

 நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென ஊர்ந்து சென்று மூளையைப் பிராண்டியது. திடுமென்று பாண்டி விழித்து கொண்டான் கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெட்டை முட்கள் காட்டின. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்து படுத்தவன் அகாலத்தில் எழுந்து விட்டான். புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்குவதற்கு பகீரத முயற்சி செய்தான். தூக்கம்தான் வந்தபாடில்லை. சட்டையைப் போட்டு கொண்டு வெளியே போவதற்கு கதவைத்