கதையாசிரியர் தொகுப்பு: கி.அன்புமொழி

3 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னத உறவு

 

 சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான். அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. கட்டிலில் தொப்பென்று விழுந்து பெருமூச்சு விட்டான். முதல்முறை என்பதால் உடல் நடுங்கியது. கண்களை மூடி முன்பு நடந்த நிகழ்வுகளை நினைக்கத் தொடங்கினான். *** குமாரின் அப்பா கம்பீரமானவர். கண்டிப்புடன்


கறையில்லா மனம்

 

 அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன. “எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?” அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன். “இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை. அவர் தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர். நாளை நடக்கவிருக்கும் சுதந்திரதின விழாவின் வரவேற்புரையை எழுதிக் கொண்டிருந்தார். “விடும்மா, பசங்களுக்குள்ள என்ன இருக்கு?” “என்ன இருக்கா, அவன் யார் தெரியுமா? அந்த அருள்மணி நமக்குச்


கல்விக் கோயில்

 

 அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர். ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார். “இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு. அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து