கதையாசிரியர் தொகுப்பு: கா.சி.வேங்கடரமணி

1 கதை கிடைத்துள்ளன.

பட்டுவின் கல்யாணம்

 

 ஸி. சுப்பிரமணிய சாஸ்திரியார் சால்ட் இலாகாவில் 6-ஆவது கிரேட் ஸ்ப் இன்ஸ்பெக்டர். வறண்ட கடப்பை கர்நூல் ஜில்லாக்களின் மலேரியா ஜ்வரம் நிறைந்த மலைப் பிரதேசங்களில் ஈச்சந்தோப்பின் நடுவிலே ஐந்து வருஷ காலம் அரும்பாடு பட்டுவிட்டு, இப்பொழுதுதான் ஒரு சட்டக் கமிஷனர் துரையின் தயவினால் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த தங்கமான சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். சாலவேடு ரேஞ்சி, கலால் இலாகாவில் எவரும் விரும்பத்தக்க இனிய இடம். அந்த ரேஞ்சு ஸப் இன்ஸ்பெக்டரென்றால் ஒரு குட்டிக் குபேரனென்றே எவரும்