கதையாசிரியர் தொகுப்பு: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கா தங்கை..

 

 “யார் இவள்..? எங்கோ. பார்த்த முகம் மாதிரி தெரிகிறது..?” என்கிற யோசனையுடன் அலுவலக வரவேற்பறையில் நுழைந்தான் தினேஷ். அவனைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த அவள் இவன் உள்ளே வர…மரியாதை நிமித்தம் சட்டென்று எழுந்து நின்றாள். “உட்காருங்க. யார் நீங்க..?” அமர்ந்தான். அவளும் அமர்ந்தாள். “பத்து நாளைக்கு முன்னாடி கோட்டுச்சேரியில் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டு வந்தீங்களே சுமதி. அவளோட அக்காள் வைதேகி நான்.” என்று அவள் தன்னை அறிமுகப் படுத்தி கொண்டாள். “அக்காவா..? !” யோசித்த


போஸ்ட் மார்டம்…!!

 

 பிணவறையின் கட்டிலில் சுகந்தி சலனமற்றுக் கிடந்தாள். அருகில் கடைநிலை ஊழியன் முனியன் முழு போதையில் கண்கள் சிவக்க நின்றிருந்தான். அவனுக்கு இரண்டடி தள்ளி கையில் குறிப்பேட்டுடன் பே னாவும் கையுமாக டாக்டர் குணா இருந்தான். “ம்ம்… ஆரம்பி முனியா..?” குணா அவனுக்கு உத்தரவிட்டான். அதற்காகவே காத்திருந்த முனியன் அவள் மேலிருந்த அத்தனைத் துணிகளையும் வழித்து எடுத்து கீழே போட்டான். பளிச்சென்ற நிறத்தில் பிறந்த மேனியாக இருந்த அந்த உடலை இறந்த உடல் என்பதையும் மறந்து வெறித்துப் பார்த்தான்


பூவும் புயலும்..

 

 அலுவலகம் செல்ல தயாராக இருந்த கணேஷ் சட்டென்று நெற்றியை நெருக்கி, முகத்தைச் சுருக்கி, பொட்டுக் குழியை அழுந்த பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தான். பார்த்த அவன் மனைவி மகேஸ்வரிக்குச் சொரக்கென்றது. “என்ன…? !” பதறியபடி ஓடி வந்தாள். “த….தலைவலி..!” முணகினான். “தலைவலின்னா உங்களுக்குத் தாங்காதே..!” படபடத்தாள். ஆமாம். கணேசுக்குத் தலைவலி தாங்காது. துடித்துப் போய்விடுவான். மகேஸ்வரி மணியைப் பார்த்தாள். 8.35. அவன் அலுவலகம் செல்ல வேண்டும். அப்படியே இவளையும் கொண்டு வேறொரு அலுவகத்தில் விட வேண்டும். “என்ன


மனித தெய்வம் !

 

 கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில்…. ஏதோ ஒரு முகம், தலை, பெண்ணுருவம் தன்னைக் கண்டு இன்னொருவர் முதுகில் ஒளிவதைக் கண்ட மலர்மாறன்… துணுக்குற்றான். ‘யார் அது..?’- உற்று நோக்கினான். அதே சமயம்….. பதுங்கிய அவளும். அந்த முதுகின் பின்னிருந்து இவனை மிரட்சியுடன் பார்த்தாள். இவனுக்கு ஆள் அடையாளம் தெரிந்தது. ‘லட்சுமி !’ இவள் ஏன் தன்னைப் பார்த்துப் பயப்படவேண்டும்..? ஆளைக் கண்ட மாத்திரம் ஆத்திரத்தில் வெட்டி விடுவேன், குத்திவிடுவேன் பயமா..? ! –


மச்சம் உள்ள ஆளு…!

 

 மாலை மணி 6. 30 கண்கள் குழி விழுந்து சோர்வு, தளர்வுடன் வரும் சேகரைப் பொறாமையாகப் பார்த்தார்கள் அறை நண்பர்களான சிவா, குமார், ராமு, கணேஷ். ” ஒரு இரவு, ஒரு பகல் ! ஏ அப்பா !” “மச்சம் உள்ள ஆளு…!!” “தினைக்கும் அனுபவிக்கிற…ராசி ! ராஜா !” ” எங்களைச் சொல்லு..? வேலைக்குப் போய் வெந்த சோத்தைத் தின்னுட்டு வெட்டியாய் இருக்கிறவர்கள்” என்று ஆளாளுக்கு அவனைக் கலாய்த்தார்கள். “சும்மா புலம்பாதீங்கடா. உங்களிடம் சரக்கு இல்லே.


எச்சரிக்கை..!

 

 ” இதோ பாருங்க..! பாலுக்குக் காவலா பூனையை வைச்சுட்டுப் போற மாதிரி உங்களை வைச்சுட்டுப் போறேன். வீட்டுல யாரும் இல்லேங்குற துணிச்சல்ல என் தங்கச்சிக்கிட்ட எசகு பிசகா நடந்துகிட்டீங்க… ஆமா..! அப்புறம் நடக்கிறதே வேற…”இதோடு என்னை ஆயிரத்தெட்டுத் தடவையாக எச்சரித்து விட்டாள் என் மனைவி சங்கவி. எனக்கு எரிச்சலாக வந்தது. “ஏன்டி..! எத்தனைத் தடவை இதையே பதிவு நாடா மாதிரி மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவே..? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அவளையும் அழைச்சிக்கிட்டுப் போறதுதானே


ஆவி வருது…!

 

 அந்த கிராமம் முழுக்க அதே பேச்சாக இருந்தது. பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளசுகள், சிறுசுகள் வரை அது பரவி இருந்தது. எல்லோர் மனதிலும் பயப் பிராந்தி அட்டையாக ஒட்டி முகம் பீதி, கலக்கத்தில் குழம்பிக் கிடந்தது. முன்னிருட்டு நேரத்தில் கூட அந்த கிராமத்தின் மொத்த மக்களும் வெளியே வர பயப்பட்டார்கள். தற்போது…. சுப்ரமணி கூட தன் இளவட்டங்களோடு ஊர் ஒதுக்குப் புறமாய் இருக்கும் ஆலமரத்தடியில் இது பற்றி பேசிக் கொண்டிருந்தான். “ராத்திரி ஒண்ணுக்கு வருதுன்னு எழுந்திரிச்சப்ப நான்


எதிர்வீட்டு ஏந்திழை!

 

 ‘அந்த’படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனசு குறுகுறுத்தது. உடம்பின் சூடு சுரம் அடிப்பதைப் போல கொதித்தது. தட்டினால் தெறித்து விடும் வீணையின் கம்பி போல உடல் அதிகமாய் முறுக்கேறியது. மனைவியைத் தலைப் பிரசவத்திற்காக பிறந்தகத்திற்கு அனுப்பி இருக்கும் இந்த வேளையில், தண்ணி,’பலான’படங்கள் பார்த்தால் இந்த மாதிரியெல்லாம் ஓன்று கிடைக்க ஒன்று செய்து அவஸ்தைப் வேண்டி வரும் என்ற நினைப்பில்தான் மூன்று மாத காலமாக நண்பர்கள் பார்ட்டிக்கு வற்புறுத்தி அழைத்தும் நழுவி நழுவி வந்தேன். அவர்கள் இரண்டு நாட்களாக அடித்த


இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!

 

 பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு இன்று காலை 10.00 மணிக்கே பேருந்து ஏறிவிட்டான். ஆள் வர்றதுக்கு எப்படியும் இரண்டு நாட்கள் கண்டிப்பா ஆகும் ! வீட்டுல …அவன் மனைவி மல்லிகா மட்டும் தனி. ஒன்னும் பிரச்சனை இல்லே ! வாழ்க… பள்ளிக்கூட கோடை விடுமுறை !’நினைக்கும்போதே மகேசுக்குள் மனம் துள்ளி, குத்தாட்டம் போட்டது. ‘அதே சமயம் இங்கே…!’ நினைத்த அடுத்த வினாடி……. ஏறிய


சுமந்தவன்

 

 “என்னங்க..?” என்றவாறே கட்டிலில் வந்து கணவனுக்குப் பக்கத்தில் இழைந்து, குழைந்து அமர்ந்தாள் நந்திகா. “என்ன..?” – கணேஷ் அவளை ஆசையுடன் அணைத்து தன் மடியில் கிடத்தி மனைவி கண்களை உற்று நோக்கினான். “நாம நல்லதுக்கு ஒன்னு சொல்றேன். நீங்க கேட்கனும்….” “சொல்லு..?” “நாம தனிக்குடித்தனம் போயிடலாம்.” “……………………………” “இல்ல… நாம உங்க அண்ணனைத் தனியே அனுப்பிடலாம்.” “அப்புறம்..?” \ “அவர் காய்கறி சந்தையில மூட்டைத் தூக்கி வேலை செய்யிறது நமக்கு அவமானம்.. என்னடி..! இவரா . உன்