கதையாசிரியர் தொகுப்பு: கவிதா சொர்ணவல்லி

7 கதைகள் கிடைத்துள்ளன.

யட்சி ஆட்டம்

 

 எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி


எங்கிருந்தோ வந்தான்…

 

 வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று


மழையானவன்…

 

 முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த


நான் அவன் அது…

 

 ‘மார்கழி மாசக் குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக் குளிரு தரையத் துளைக்கும்’ என்ற அம்மாச்சியின் சொலவடை ஞாபகத்துக்கு வந்தது. தை மாசப் பனி, தரையைத் துளைத்துக்கொண்டு இருந்தது. வீட்டின் சாவித் துவாரத்தைக்கூட மூடியாகிவிட்டது. மெத்தை, போர்வை, எதுக்கும் கட்டுக்குள் வராதுபோல், பனி தன் முழு ஆவேசத்துடன் ஆடிக்கொண்டு இருந்தது. அதிகப் பனி, தற்காலிகத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. கிச்சன் பக்கம் போய் ஒரு இஞ்சி டீ போட்டுஎடுத்துக் கொண்டு டி.வி. இருந்த ஹாலுக்கு வந்து சோபாவுக்குள் என்னைப்


அம்மாவின் பெயர்

 

 அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகு காலத்துக்குத் தெரியாது எனக்கு. அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா என்பதைத் தவிர. ‘வாட் இஸ் யுவர் ஃபாதர்ஸ் நேம்?’ என்ற கேள்விகளினால் அப்பாவுக்குப் பெயர் உண்டு என்பது நன்றாகவேதெரிந்து இருந்தது. அம்மாவைப்பற்றியும் கேட்டு இருப்பார்கள். ஆனால், அடிக்கடி கேட்டு நினைவில் பதியவைத்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அம்மா… எல்லோருடைய அம்மாவையும்போல் அவளும் அழகானவள்தான். பேரழகி. கண்ணை உறுத்தாத, மெலிதான… ஆனால், பொறாமை ஏற்படுத்தும் அழகி. அவளைவிட


கதவின் வெளியே மற்றொரு காதல்

 

 ”வேல்னு ஒரு பையன். பெரிய ஜர்னலிஸ்ட். அஞ்சு மாசம் முன்னே அறிமுகம். நாலு மாசமா நல்ல ஃப்ரெண்ட். இப்ப கொஞ்ச நாளா லவ்வர் மாதிரி தெரியிறான். ஆக்ச்சுவலா நான் அவனை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்டி!” அதிர்ச்சி ப்ளஸ் குழப்பம் ப்ளஸ் ஆச்சர்யம் ப்ளஸ் இன்ன பிற சங்கதிகள் என்னை அதிரடித்தன. ஏற்கெனவே ஒரு காதலில் இருப்பவளிடம் இருந்து அந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும், ‘எங்களது எ ட்ரூ லவ் ஸ்டோரி!’ என்று அவள் வாயால் நூறு


விலகிப்போன கடவுள்கள்!

 

 கால் நனைக்க தாமிரபரணி, கை கழுவ பாபநாசம், தலை துவட்ட தென் பொதிகை, கன்னம் வருட நெல்மணிகள் என்று உலகத்தைப் பச்சை வண்ணமாக மட்டுமே உணர்ந்த ஒரு பெண்ணான எனக்கு சென்னை பிடிக்காமல் போனதில் அதிசயம் இல்லை. இங்குள்ள கடவுள்களிடமும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சென்னையின் தெருவோரப் பிள்ளையாரிடம்கூட ஒட்ட முடியாமல்போனது எனக்கே எனக்கேயான வருத்தம். நகரத்தில் எல்லா கடவுள்களும் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். ஆனால், பக்கத்தில் வரவழைக்கிற அந்நியோன்னியம் இல்லை என்று தோன்றியது தீர்மானமாக!