கதையாசிரியர் தொகுப்பு: கவிஞர் காரைக்கிழார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பியூன் துரைசாமி

 

 டமார் என்று ஒரு சத்தம். அந்த அலுவலகத்தில் இருந்த அத்தனை பேருடைய கண்களும் ஒரே இடத்தில் வெறித்து நின்றன. மேசையிலிருந்து தவறி விழுந்த கண்ணாடிக் குப்பி, ஆத்திரக்காரனின் அறிவைப்போல தரையில் சிதறிக் கிடந்தது. அருகே உள்ளம் பதற, உடலும் பதற ஒருகணம் தவித்துப்போய் நின்ற துரைசாமி அவசரமாகச் சிதறலைப் பொறுக்கத் துவங்கினார். பல திக்கிலுமிருந்து பலவகையான வசையொலிகள் வெடித்தன. பெரிய கிராணி ஆசோங்கின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்தது. டைப்பிஸ்ட் லெங் லெங் கூட ஏதேதோ சொன்னான். அது


விடிவதற்குள் முடிவு வேண்டும்

 

 வானம் குமுறிக் கொண்டிருந்தது…… ஜானகியின் மனசைப் போல…. இந்தப் பதினாறு நாட்களாக அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. ஆனால் கண்கள், இன்னும் வற்றி விடவில்லை. ஒரு காலத்தில் வேல்விழி, மீன்விழி, மான்விழி என்றெல்லாம் அவன் கணவனால் வர்ணிக்கப்பட்ட அந்தக் கண்களிலிருந்து புது மரத்தில் கீறல் விழுந்ததும் பிதுங்கிக்கொண்டு வரும் பாலைப் போல வெதுவெதுப்பான நீர் சுரந்தவண்ணமாக இருந்தது. வீட்டுக்கு முன்பாக தற்காலிகமாக சீனன் போட்டுவிட்டுப் போன தகரக் கூரையின் கீழாக உற்றத்தார் சுற்றத்தார் என்று