கதையாசிரியர் தொகுப்பு: கல்கிதாசன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

பஸ் பயணம்

 

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது காலை 5.00 மணிக்கு திரு நெல்வேலிக்குக் புறப்படும் END TO END பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது.உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ்


கமலியும் ப்ரியாவும்

 

 கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை மாற்றிக் கொண்டே மணியைப் பார்த்தாள். ஐந்து நாற்பது. ஆச்சு!. ப்ரியா வந்துடுவள் என்று எண்ணுமுன்பே ஹாலில் வந்து பொத்தென்று சோபாவில் விழுந்தாள் ப்ரியா. அவளை காலேஜ் பஸ் தினமும் சரியாகக் வீட்டில் கொண்டு சேர்த்துவிடும். “ப்ரியா! கோவிலுக்கு வரியா. இன்னிக்கு ஸ்ரீராம நவமி. ராமரை தரிசித்து ரொமப நாளாச்சே. வாயேன் போய்ட்டு வருவோம்” என்றாள் கமலி.


நூற் கண்டு

 

 சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால் பாத்திரத்துடன் வேகமாக வெளியே வந்து ஆத்தைப் பூட்டி பக்கத்தில் சியாமளா மாமியாத்து வாசற்படியில் சாவியையும் பால் பாத்திரத்தையும் வைத்தபடி “மாமி ஆபிஸ¤க்கு போயிட்டு வரேன் சாவியையும் பால் பாத்திரத்தையும் உள்ளே எடுத்து வச்சிகோங்கோ “என்று சத்தம் போட்டுக் கொண்டே தெருவில் தாவிக் குதித்து ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டைப் பார்த்துப் போனான். சிவராமன் ஒரு வங்கி


பால் மாடு

 

 பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைத்தபாடில்லை. குமாரவேலின் தந்தை ராசு ஆசா¡¢ வீட்டின் பின்புறம் வைத்திருந்த பட்டறையில் இரு நண்பர்களும் படிக்கிற பொழுதே விளையாட்டாக தச்சு வேலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். விவசாயியான சுயம்புவின் தந்தை இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் அவர் பெண்ணின் கல்யாணத்திற்கு அடமானம் வைத்து அதன் பின் மீட்க முடியாமல் ஈட்டிக் காரனிடமே நிலத்தை


கலி முத்திண்ருக்கு

 

 ஹாலிலுள்ள டீவி, சோபா இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த தூசிகளை பழைய துணியை வைத்து அகற்றிக் கொண்டிருந்த கோபாலனை கைபேசி ஒலி அழைத்தது. எதிர் முனையில் அவனது பால்ய சினேகிதனும் தற்பொழுது சம்மந்தியாகும் வாய்ப்புமுள்ள சடகோபன். அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான் கோபாலன் துணியைத் தூர வீசிவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான். அவன் வீட்டிற்குள் சிக்னல் ஒழுங்காகக் கிடைக்காது. சடகோபனிடம் “டேய்! நாங்கள் ரெடியாக இருக்கின்றோம். பையன் நேத்தியிலிருந்தே ஆபிஸ¤க்குப் போகலை. இரண்டு நாளா என்


மழை வெள்ளம்

 

 மெக்கானிக் சுதனுக்கு ஞாயிறு தோறும் ஷிப்ட் மாறும். அந்த வாரம் அவனுக்கு இரவு ஷிப்ட் கடந்த இரண்டு நாட்களாகவே கனத்த மழை பெய்வதால் சைக்கிளில் செல்லாமல் நடந்தே தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தான். அன்று மழையும் மிக அதிகமாக இருந்தது, மின்சாரமும் போய்விட்டிருந்தது. பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சுதனிடம் அவன் மனைவி டார்ச் லைட்டை கையில் தந்தாள். உங்களுக்கு? என்று சுதன் கேட்க “நாங்கள் மெழுகுவர்த்தியை வைத்து சமாளித்துக் கொள்வோம். ரோடெல்லாம் ஒரே கும்மிருட்டு. வெள்ளக் காடாக வேறு


நாணயம்

 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்குக் கல்லூரி கிடையாது.காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பொழுது போகாமல் டீவியில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமில்லாதிருந்தாலும் விடாமல் ஒவ்வொரு செனலாகப் புரட்டிக் கொண்டிருந்தான் அவனுக்குப் பிடித்தது ஏதாவது கிடைக்குமாவென்ற நப்பாசையில்.அவன் என்னதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் அவனது ஆங்கில மொழியறிவு போதுமானதாக இல்லை அதனால் அவன் தந்தை தினமும் கொஞ்ச நேரமாவது ஆங்கில தினசரியைப் படிக்கும் படியும் முக்கியமாக தலையங்கம் ,கட்டுரைகள் போன்றவைகளைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்பார். அவனுக்கோ ஆங்கிலம் வேப்பங்காய்.அன்று வந்த தினசரி


சபலம்

 

 மோஹனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் காசாளர் வேலை. பத்து வருட சர்வீஸ். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அதே குறைந்த சம்பளம்.இவனைவிட நிறையப் படித்துவிட்டு வேலையின்றி தெருவில் அலைந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தினந்தோறும் சந்திப்பதாலும் தனக்கு கல்யாணமாகி மனைவி, குழந்தை இருப்பதால் இருக்கின்ற வேலையை தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நின்று விடக்கூடாது என்ற பயத்தினாலும் அவன் சம்பள உயர்வே கேட்டதில்லை. சம்பள உயர்வுகேட்டாலே கொடுக்கத் தயங்கும் முதலாளிகளிடம் கேட்காமல் இருந்தால் எப்படிக் கிடைக்கும்? மோஹனுக்கு ரொம்ப


யார் கடவுள்?

 

 மாலை 4 மணிக்கு மணக்க மணக்க சூடாக பில்டர் காப்பியை ருசி பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கைபேசி ஓசையெழுப்பி அவரை அழைத்தது.மனமில்லாமல் காப்பி டம்பளரை டிரேயில் வைத்துவிட்டு கைபேசியை எடுத்தால்பெசண்ட் நகரில் இருக்கும் அவரின் மாட்டுப்பெண், மதுமிதா,நமஸ்காரமென்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள்.அவர்கள் எல்லோரும் சாயந்திரம் ஏதோ பார்ட்டிக்கு செல்லப் போகிறார்கள் திரும்பி வருவதற்கு ஒரு வேளை தாமதமாகலாம் ,அன்று இரவு விஜய் டீவியில் ஒளிபரப்பவிருக்கும் “நீயா நானா” நிகழ்ச்சியில் அவள் கணவனும் அவளும் கலந்து கொண்டிருப்பதால் அதனை


அடுத்த வீட்டு திருட்டுப் பூனை

 

 முரளி சித்தார்த்திடம் அங்குள்ள புராதானமானதும் நல்ல முறையில் ஒழுக்கத்தையும் கல்வியையும் சேர்த்து போதிக்கும் பெருமை வாய்ந்ததுமான அந்த ராமகிருஷினா பள்ளியில் நகுலைச் சேர்த்து விடுவோம் என்றான். ‘அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது “குதிரைக் கொம்பாயிற்றே”- சித்தார்த் ‘எனக்கு அங்கு நல்ல பிடியுண்டு . ஆனால் LKG யிலேயே சேர்த்துவிட வேண்டும். பின்னால் பெரிய கிளாசுக்குப் போனால் கிடைக்காது.’ ‘பர்ஸ்ட் ஸ்டேண்டர்டு பெரிய கிளாஸா?’ ‘அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை அப்படித்தான் ‘ ‘என் வீட்டிலிருந்து அந்தப் பள்ளி அதிக