கதையாசிரியர் தொகுப்பு: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி

4 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாஞ்சியும் ஆளொண்டாப் பிறவியும்

 

 India 1.அம்மாஞ்சி ‘சீ… நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது முப்பதாண்டுகளாக எனக்கேத் தெரியாது. “உன் சிரிப்புத்தாண்டா அழகு“ என்பது அம்மா, அப்பா தொடங்கி சொந்தபந்தம் நண்பர்கள் என அனைவரும் நேரடியாகவே எப்போதும் சொல்லும் வசனம். எவ்வளவு கோபமாக வருபவர்களும்கூட எனது சாந்தமான சிரித்த முகத்தைப் பார்த்தால் தங்களது கோபத்தின் மீது தாங்களே வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சாந்த சொரூபி நான். எந்தப் பிரச்சனையானாலும் அலட்டிக்


நிழல் தொலைத்தவர்கள்

 

 எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு பிதுங்கி ஊரிலும் ஒரு சொட்டு வியர்வை விழக்கூட இடமின்றி கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. அங்கு குழுமிய மனிதர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். தங்கள் மூதாதையர்கள் சொன்னவைகள் எல்லாம் கட்டுக் கதையென்றே இன்றுவரை நம்பி வந்தவர்களின் எண்ணம் எல்லாம் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது. காவலர்கள் இடநெருக்கடியையும் போக்குவரத்தையும் சரிசெய்தபடி மேலிடத்திற்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். அதிசயம் என்னவென்றால்


புடைத்துண்ணும் சதுக்கபூதம்

 

 நாக்கை நீளமாகத் தொங்கவிட்டபடி கிஸ்சு முஸ்சு என்று இழைத்தபடி எப்போதோ வீசப்பட்ட கல்லை நினைவில் சுமந்து, விரட்டாத கல்லுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது அந்தநாய். சிந்தனைகளில் சிக்கிக் கொண்டு என்னை மறந்து நான் நடந்து கொண்டிருக்கும்போது ‘வள்’ என்று கத்தி என்னைப்பூமியில் கால்பாவச் செய்கிறது. எப்போதும் நாய் துரத்தினால் ஓடவோ வேகமாக ஒதுங்கவோ கூடாது என்பதும் அப்படி செய்யும்போது நாயின் வீரம் பலமடங்கு அதிகரிக்கும் என அறிந்திருந்ததால் “சீ… போ… கழுத…” என்று நின்று முறைத்து வீரவசனம் பேசியதும்


வார்த்தைகளுடன் ஒரு யுத்தம்

 

 நான் என்னுள் எழுந்த வார்த்தைகளுக்கெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டிருந்தேன். கடிகாரம் நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் அறையெங்கும் நிறைந்திருந்தாலும் என்னை மறந்து நான் வர்ணம் பூசுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த வார்த்தைகள் என்னுள் எப்படி எழுகின்றன என்ற சிந்தனையில் சிறிது நேரம் பயணம் செய்யத் தொடங்கினேன். சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியின் பின்னாலேயே அதைப் பிடிக்கச் சென்றபோது கீழே விழுந்து முள் குத்தியது. பின்னொருநாளில் தும்மல் போட்டதற்காக ஒரு நீள மூங்கில் பிரம்பால் எனது வகுப்பாசிரியர் வெள்ளாளப்பாண்டியன் எனது