கதையாசிரியர் தொகுப்பு: கண்மணி குணசேகரன்

1 கதை கிடைத்துள்ளன.

வாகனம்

 

 குதிரை கணைத்தபடி சுவரோரம் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. குதிரை மீது குந்தியிருந்த வீரனுக்குத்தான், இடைஞ்சலாய் தலையில் கூரை இடித்தபடி தோள் மீது மக்கிய கருப்பஞ்செத்தைகள் கிடந்தன. சுழி சுத்தம் பார்க்கிறமாதிரி தங்கராசுவும் முருகவேலும் முன்னும் பின்னுமாய் பக்கவாட்டத்தில் வந்து குதிரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குந்தி குந்தி மண்பாண்டங்கள் செய்து கூன் விழுந்த உடம்பு. குனிந்தவாக்கில் இவர்களைப் பார்த்துக்கொண்டே வாசலில் சேற்றை மிதித்துக் கொண்டிருந்தார். காலை வெயிலில் வழுக்கைத் தலை வேர்த்து வடிந்தது. கோவணமும் நனைந்திருந்தது. பக்கத்தில் சுற்றவிட்டு பாண்டங்கள்