கதையாசிரியர் தொகுப்பு: கணேசகுமாரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

கிருபாகரனின் டைரி

 

 இன்று ஓர் ஆச்சர்யம் நடந்தது. ஆபீஸில் இருந்து திரும்பி வரும்போது, பார்க் ஸ்டேஷனை ரயில் நெருங்குவதை உணர்ந்து எழுந்தபோதுதான் கவனித்தேன். எனது ஸீட்டில் அந்த டைரி கிடந்தது. சுற்றும்முற்றும் பார்த்ததில் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர யாரும் இல்லை. முதலில் அது ஏதோ ஒரு புத்தகம் என்றுதான் நினைத்தேன். புத்தகத்தின் உள்ளே அடையாளத்துக்காக வைக்கப்படும் சிவப்பு நிற நாடா வெளியே நீண்டிருந்தது. நீல நிற அட்டை, பைபிளோ எனச் சந்தேகிக்கச் சொன்னது. கையில் எடுத்துப் பிரிக்க… டைரி. யார்


குலசாமியைக் கொன்றவன்

 

 திருப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 20 கிலோ மீட்டரில் புகழ்மேனிராஜன்குடியை அடைந்துவிடலாம். குக்கிராமம் என்பதை ‘கு’ கொஞ்சம் இடைவெளிவிட்டு ‘க்’ இன்னும் கொஞ்சம் இடைவெளி ‘கி’ இடைவெளி ‘ரா’ இடைவெளி ‘ம’ இடைவெளி ‘ம்’… அவ்வளவுதான் கிராமம் முடிந்துவிட்டது. அந்த ஊரில்தான் மலை காத்த அய்யனார் இருக்கிறார். அவர் எந்த மலையைக் காத்தாரோ, அவர் காத்த மலைக்கு என்ன கேடு வந்ததோ, அது நமக்கு முக்கியம் அல்ல. திருப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும்


அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்

 

 என் தந்தை மேல் பிரியமானவருக்கு… என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது… இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். ‘கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு வாழ்ந்திருவான்.


காயத்ரி என்கிற திலோத்தமா

 

 ”சுப்ரமணி… ஆர்த்தோ வார்டுல டாக்டர் சத்யாகிட்ட மூணு கால்சியம் வயல் கொடுத்துட்டு வாங்க. அப்பிடியே ஸ்டாஃப் காயத்ரிகிட்ட டி.என்.எஸ். எத்தனை தேவைப்படுதுனு கேளுங்க…” எலும்புமுறிவு சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு சுப்ரமணி சென்றபோது, அங்கு டாக்டர் சத்யா இல்லை. காயத்ரியிடம் ஊசி மருந்து பாட்டிலைக் கொடுத்துவிட்டு, ”இன்னைக்கு ஆஃப்தானே ஒனக்கு… சாயங்காலம் சினிமாவுக்குப் போவோமா?” என்று கேட்டான். காயத்ரி என்றதும் சிவப்பாக ஒல்லியாக பெரிய கண்களுடன் கன்னத்தில் மச்சம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டால், நீங்கள் நிறைய விஜய் படங்கள்


பைத்திய ருசி

 

 பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில் புரண்டு


சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன்

 

 சந்திரன்- சிறையினில் யாருடனும் ஒட்டாமலே இருந்தான் சந்திரன். அவன் நினைவில் பத்திலக்க எண் ஒன்றினைத் தவிர வேறு எதுவுமே இல்லாமல் போனது. அறையில் இருந்த சக கைதி ஒருவன் வில்சனைப் போலவே ஜாடையில் இருந்ததில் அவனிடம் மட்டும் எப்போதாவது பேசுவான். அவனிடம் பேசும் பேச்சில் வில்சனின் ஞாபகங்கள் மட்டுமே இருக்கும். சிறையில் கொஞ்சம் செல்வாக்கான கைதி ஒருவனிடம் இருந்த செல்போனில் ஒருமுறை வில்சன் எண்ணுக்கு முயற்சித்ததில் ‘ தாங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்‘


கொம்பன்

 

 குருதி சிதறும் களத்தில் அலறும் களிறுகள் யானையின் கண் அசைந்தது.இரு கைகளாலும் இறுகப் பிடித்திருந்த வாள் உயர்ந்து காற்றினை வெட்டியவாறு சரேலென கீழிறங்கியது. விழி மூடவந்த யானைச் செவிமடல்கள் ஒரு நொடி நின்று பின் விசிறின. யானையின் தந்தத்தின் மீதான சதைமீது இரத்தக் கவிச்சி உறைந்த வாள் பதிய பீறிட்ட இரத்தம் எதிரே குதிரை மீது அமர்ந்திருந்தவன் முகத்தில் பட்டுத் தறித்து குதிரையின் நெற்றியில் சிதறி இமைமயிர் நனைந்து வழிந்து கண்கள் மூடிய குதிரை முன் நகர்ந்தது.