கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.செந்தில்குமார்

23 கதைகள் கிடைத்துள்ளன.

இமயமலை பஸ் டிக்கெட்

 

 சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது, அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. சங்கரன் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த நீரை அள்ளி முகம் கழுவியபோது ஊரில் இருந்து கும்பலாக பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கூடைகளைத் தங்களது கக்கத்தில் இடுக்கியபடி நடந்துவருவதை சங்கரன் பார்த்தான். கோழிக்கொண்டைப் பூக்களும் செவ்வந்தியும் தோட்டத்தில் மலர்ந்து விட்டது. பூ எடுக்க கூலியாட்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பின்பாக இரண்டு எருமைகள் அசைந்து


புலி சகோதரர்கள்

 

 மச்சப்புலி, மோட்டார்பைக்கை ஸ்டுடியோவின் வாசலில் நிறுத்திவிட்டு, எதிரே இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தார். கடைக்குப் பக்கத்தில் இருந்த கூரை வேயப்பட்ட கட்டடத்தினுள் கூட்டமாக இருந்தது. மெர்க்குரியின் வெளிச்சம் அவரது கண்களைக் கூசவைத்தது. சிகரெட் புகைப்படலம் வெளிச்சத்தின் ஊடே அலைஅலையாக நகர்ந்தபடி இருந்தது. கட்டடத்தின் இருளுக்குள் மஞ்சள் நிறம் திட்டுத்திட்டாகப் படிந்திருப்பதுபோல தெரிந்தது. கும்பலாக ஆட்கள் வெளியேறுவதும், புதிதாக ஆட்கள் கடைக்குள் நுழைவதுமாக இருந்தனர். இரண்டு பேர் பாட்டிலை வாங்கி, தங்களது இடுப்பில் செருகிக்கொண்டு சென்றனர். மச்சப்புலி பிளாட்பாரத்தில்


சங்கு மீன்

 

 ‘கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும். கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர்,


சிக்கந்தர் அப்பச்சி

 

 சிக்கந்தர் அப்பச்சி வீட்டு முற்றத்தில் இருக்கும் வெள்ளைப் புறாக்கள், என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. அப்பச்சியும் அப்பச்சியின் அம்மாவும், புறாக்களுக்கு அரிசிமணிகளைத் தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி புறாக்கள் பறப்பதும், தரை இறங்கி எங்களின் கால்கள் இடையே நடப்பதுமாக இருந்தன. குட்டியான நீலக்கண்கள் கொண்ட புறா ஒன்று, என் கால்களைக் கொத்தியது. வலி தாங்க முடியாமல் நான் கத்துகிறேன். பயத்தில் கண்விழித்துப் பார்த்தேன்… கனவு. பேருந்து, செங்கல்பட்டைக் கடந்துவிட்டது. எனக்கு அருகில் தூங்கிக்கொண்டு இருந்தவரைப் பார்த்தேன். அவர் தன் கையில்


வெண்டி மாப்பிள்ளை

 

 வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து…பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது. வெண்டி


அவர்கள் சென்ற பாதை

 

 ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த காரணத்தையும் யாராலும் கண்டறிய முடியவில்லை என்பதும் உண்மை. அவன் இப்போதும் வின் நினைவாகவே இருந்தான். அவனுக்கு வருகிற ஜனவரி 20-ம் தேதி இரண்டாவது திருமணம் என முடிவாகி, அதற்கான அழைப்பிதழை எனக்கும் அனுப்பியிருந்தான். அவனுக்கு முதல் திருமணம் நடைபெற்ற அதே மண்டபத்தில்தான், இரண்டாவது திருமணமும் நடைபெற இருக்கிறது. என் ஆச்சர்யத்தையும் கவலையையும் யாரோடு


காணும் முகம் தோறும்

 

 ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள். ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள்


காணும் முகம் தோறும்

 

 ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள். ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள்


உமிக்கருக்கு

 

 வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது. வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம்


அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை

 

 ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம் ஒன்றும் தெப்பக்குளத்தில் புதிதாக விடப்பட்டுள்ள மோட்டர் படகு சவாரிக்கான அனுமதிச் சீட்டும் இலவசமாகத் தருவதாக அறிவித்துப் பத்து தினங்களுக்கும் மேலாகியிருந்தது. அறிவிப்பைக் கேட்டு லட்சக்கணக்கான ஜனங்கள் வரக்கூடுமென்று இவ்விளையாட்டை அறிவித்திருந்த மோட்டர் படகு நடத்தும் நிறுவனம் காத்திருந்தது. உலகத்திலுள்ள அனைத்துக் குப்பைகளும் கொட்டப்படும் இந்நகரத்தில் வாழ்கிறவர்கள் தினமும் புதிய புதிய அறிவிப்புகளைக் கேட்டுப் பழகியிருந்தனர். அவர்கள்