கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.சுவாமிநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

நேர்முகம்

 

 அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து, கையில் பைல்களுடன், முகத்தில் எதிர் பார்ப்புடன், ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்திருந்தனர். உதட்டுச்சாய இதழ்களில், நுனி நாக்கு ஆங்கிலம் தவழ, புன்னகை யுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளினி, ஒவ்வொருவரின் பெயரையும் மென் மையாக அழைத்து, அவர்களின் பைல்களை வாங்கி, அதிலிருந்த சான்றிதழ்களைப் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தாள். அவர்கள் எல்லாருமே, அந்தப் புதிய நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்