கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.சஞ்சய்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கேள்விகள்

 

 கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க… சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு… அறிவுக்கொழுந்துன்னுவாகளே… அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்… அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ… அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க…


எடிசனும்… மாரியக்காவும்…

 

 என்னமோ காளிமுத்து மட்டுந்தேன் இந்த எட்டு ஜில்லாவிலேயே பத்தாவது படிக்கிற மாதிரியும், அவுங்க ஸ்கூலு ஆண்டு விழா என்னமோ அவனுக்கு மட்டுந்தேன் நடந்த மாதிரியும், அந்த விழாவுல பேச வந்தவரு இவன்கிட்ட மட்டுந்தான் பேசினமாதிரியும் அவுங்க அம்மா பஞ்சவர்ணத்துக்கிட்ட பள்ளிக்கொடக் கதய தயாரிப்பாளர்கிட்ட புது டேரக்டரு அழுதுகிட்டும் சிரிச்சிக்கிட்டும் ஆக்ஷனோட சொல்லுவாரே அதே மாதிரி சொல்லிக்கிட்டிருந்தான். கத புடிக்கலேன்னா, அப்பறம் பாக்கலாம்னு தயாரிப்பாளர் எந்திரிச்சுப் போயிருவாரு, ஆனா பஞ்சவர்ணம் தயாரிப்பாளரில்லை என்பதாலும், அவனைப் பெற்ற தாய் என்பதாலும்,