கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.காமராஜ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

 

 முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப் பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பரவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப்பொட்டுக்கும் சம்பந்தமில்லாத கிராப் தலை. நாலு அடி ஐந்தங்குல உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து எட்டிருக்கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை


மஞ்சுவிரட்டு

 

 ஒரு பச்சைக்கலர் தகரப்பேட்டி, கண்கள் குழிக்குள் கிடக்கிற பசி, துணைக்குச் சித்தப்பா. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அந்த ஊர் இன்னும் வறட்சியாகத் தெரிந்தது. வழி நெடுகக் கடந்து போன பொட்டல் காடுகளும் வேலிக்கருவேல மரங்களும் அது வரை பதிவு செய்யப்பட்ட சினிமாக் கிராமங்களை கிழித்துப் போட்டிருந்தது. வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்ததிலிருந்து அவன் வேற்று மனிதனாகிப் போனான். ஊதாரி, உருப்படாதவன் என்கிற பிம்பம் உடைந்து அரசாங்க முத்திரை குத்தப்பட்ட மரியாதை அவன் மேல் பதிந்தது. ரெட்டைப் போஸ்ட்டுக்கு வழியனுப்ப


பூச்சிக்கிழவி

 

 ”இந்தா வாரேன்…. பிள்ளைகளா…. பெசாசுக, ஒங்காத்தாமாரு ஒங்கள எந்த நேரத்துல பெத்தாளுக” உட்கார்ந்த இடத்திலிருந்து கையை அரை வட்டமடித்துத் தடவி ஊனுகம்பைத் தரையில் தட் தட் என்று பலங்கொண்ட மட்டும் அறைந்தாள். இருந்த நாலைந்து பேரும் கலைந்து ஓட்டிவிட்டார்கள். அவனும் அமல்ராசும் கிழவியின் ஊனுகம்புக்கு எட்டாத தூரத்தில் பத்திரமாகப் பதுங்கிக்கொண்டார்கள். ”கம்ப தூக்கிட்டு ஓடிருவமா? “அமல்ராஸ் குசு குசுத்தான். “ஏ பாத்துடா, மாட்டுனமுன்னா அன்னைக்கி ஊச்சி மூக்கனுக்கு உழுந்த மாதிரி உழுந்துரும்” அமல்ராஸ் பூனைபோல எட்டெடுத்து வைத்து