கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.அர்ஷியா

9 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி இடம்

 

 ஊர்ந்து, வழிந்து, வழியில் தென்படும் குழிகளில் இறங்கி, மேடுகளைத் தயக்கத்துடன் கடந்து, சட்டென்று வேகமெடுத்துப் பாயும் புதுவெள்ளத்தின் வீச்சு அவனிடம் இருந்தது. வலைப்பின்னல் தொப்பியும் குஞ்சுதாடியும் அவனுக்கு எடுப்பையும் ஆலிம் தோற்றத்தையும் தந்தன. நொடிக்கொரு தரம், “அல்லா லேசாக்கிடுவான்” என்பான். விஷயத்துக்கேற்ப குர்-ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசும் விஷயஞானமும் அவனிடமிருந்தது! கழுத்தை மேலே எழுப்பி, இதமாய்க்காலை உதைத்தும் கைகளை வீசியும் நீந்தும் பரவசம் அவன் பேச்சிலிருந்து இடம் பெயர்ந்து என்னையும் பரவசப்படுத்தியது. இத்தனை நாட்கள் ஏன்


உப்புக்குழி

 

 கபர்க்குழிவெட்ட பாபுகானைத் தேட வேண்டியிருந்தது. வழக்கமாக அவன் உட்காரும் ‘இட்லிமண்ட‘ எழுமலை சலூன் கடை, பேசிக்கொண்டு நிற்கும் ‘டாவு‘அலாவுதீன் வெற்றிலைப் பாக்குக் கடை, கடனுக்குச் சாப்பிடும் ‘அட்டு‘அய்யர் கடை என்று ரஷீத் அலைந்து திரிந்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தது. இரண்டுமுறை அவன் குடியிருக்கும் லண்டன் பாய் தோப்புக்கும் போய்வந்துவிட்டான். எல்லோரும், “இப்ப இங்கனத்தானே நின்னுக்கிட்டு ருந்தான்!” என்று சொன்னார்கள். வெளியே தலைநீட்டி எட்டி இருபுறமும் பார்த்து, “எங்கனயும் போயிருக்க மாட்டான். இங்கனத்தான் இருப்பான்!” என்று ஆசுவாசமும்


கற்பவை… கற்றபின்…

 

 நேற்றுமதியத்திலிருந்து எதைச்செய்தாலும், அதனூடாக அம்மாவின் நினைவும் நிழலாகச் சேர்ந்துவந்தது. மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ முகம் தெரியாத ஒருஆள், தன்னுடன் வந்தவரிடம், “எங்கம்மா, நல்லா மீன்கொழம்பு வைப் பாங்க!“ என்று சிலாகித்துச்சொன்ன நொடியில், மனசுக்குள் அம்மாவின் நினைவு, புகை போல மேலெழுந்து அலையாடி, பல சித்திரங்களை வரைந்து தள்ளியது. அம்மாவுக்கும் மீன்குழம்பு நன்றாகச் சமைக்கவரும். மூன்றுதெருவுக்கு மணக்கும். கை கழுவிவிட்டு வெளியேவந்தபோது, ‘இந்தா… பாக்கு போட்டுட்டுப்போ!‘ என்று அம்மாவே சொல்வதுபோலிருந்தது. இரவுத்தூக்கத்திலிருந்து இரண்டொருமுறை அம்மா வின் நினைவுகளோடு விழிப்பு


வேட்கை

 

 வீசியெறிந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தும், விஷம் தோய்ந்தக் குறுவாள்களுக்கு ஒப்பானவை என்பதை அறியாதவளல்ல, நீ. வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளா மல், விரக்தியை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கான வாய்ப்பாக, வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டாய். மூர்க்கப்பூனையின் நகப்பிறாண்டலாய், அந்தவார்த்தைகள் என் இதயத்தைக் கூறு களாகக் கீறிவிட்டன. மனச்சுவரின் அத்தனை திசைகளிலிருந்தும் ரத்தம் கசிகிறது. வார்த்தை களால் குத்துப்பட்ட என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் கூசிக்குறுகி மறுகுவதை, நீ உணர முடியாது. எதையும் கேட்கும் மனநிலையில் நீ இல்லை. பிறகெங்கே உணரும் மனநிலை


மய்யம்

 

 சித்திரை மாதத்து வெயிலை மார்கழியில் உமிழ்ந்த ஒரு மத்தியானப்பொழுதில், முகம்மத் ஜலீல் அஹமத் ரப்பானி, ‘மௌத்‘தாகிப் போனார். முக்கியவேலைகளைத்தாண்டி, வீட்டைவிட்டு வெளியில் எங்கும்போகாத அவர், கழுதையும் ஒதுங்கிநிற்கும் பகலின் கடும்வெயிலையும் கம்பளிகளையும் ஊடுருவி நடுமுதுகைத் தாக்கும் இரவின் கொடும்பனியையும் தாங்கமுடியாமல், உடல் நலிவுற்றிருந்ததாகச் சொன்னார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இரண்டுநாட்களுக்கு முன்னால்தான் சுகமாகி, வீடு திரும்பியிருந்தார். இன்று முற்பகலின் உச்சியின்போது, தினந்தந்தி நாளிதழின் ‘உலகச்செய்திகள்‘ பகுதியில் வெளியாகியிருந்த, இயற்கைமுறையில் வாழும் அர்ஜென்டைனா நாட்டின் 113 வயது மூதாட்டி


சுற்றிச்சுழலும் தட்டைப்பாம்புகளும் புளிபோடாத உளுவைமீன் குழம்பும்

 

 ஜூம்ஆவில் பயான் (பிரசங்கம்) செய்துகொண்டிருந்த ஹஜரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானியின் பேச்சு, காட்டுப்புதர்களிடையே மகுடி ஊதும் பிடாரனின் குரலாக வசியம் கொண்டிருந்தது. ஆலவிழுதுகளாய் முறுக்கிக்கொண்டு புற்றிலிருந்து வெளிக்கிளம்பும் பாம்புகளின் உடல்களாய்ச் சொற்கள் வளமும் செறிவுமாகத் தெறித்து விழுந்தன. சொற்களின் ஓசையில், பாம்புகளுக்கான இசை அலையாடியது. வார்த்தைகளை வெளியேற்ற வாய்த்திறக்கும்போது அவர் நாக்கு, தடித்த மலைப்பாம்பாய் எட்டியெட்டிப் பார்த்தது. புழுபூச்சிகளைப் பிடித்து உணவாய் உட்கொள்ள ஏதுவாக இருக்கும் நாக்குப்பசை, அவர் வாயிலிருந்து எச்சிலாக சிதறித் தெறித்தது. எதிரே இருந்தவர்கள்


பேரண்ட வெளிச்சம்

 

 பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை ஒடிக்கக் கை உயர்த்தியபோது, அதுவரை வாகாய்த் தாழ்ந்திருந்த மரம், ‘சொய்ங்’கென்று மேலே போய்விட்டது. எப்போதும் குச்சியொடிக்கும் மரம்தான், அது. இதற்குமுன், இப்படி நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்ததாக, நான் கேள்விப்பட்டதுமில்லை. கோபித்துக் கொண்ட சவலைப்பிள்ளை முகம் தூக்கிக்கொள்வதுபோல நெடிதுயர்ந்துவிட்ட மரம், குச்சியொடிக்க முடியாத உயரத்தில், தனது கிளைகளை இருத்திக்கொண்டது. ஏணி வைத்தோ, மாடியில் ஏறியோக்கூட ஒடிக்க முடியாத உயரம், அது! கொல்லிமலை முனிவர் ஒருவர், ‘தினமும் வேப்பங்குச்சியால்தான் நீ பல்துலக்க வேண்டும்’ என்று என் கனவில்


மொய்

 

 ஆரவாரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் கல்யாண வீட்டை நோக்கிப் புறப்பட்டது. நாகஸ்வரம், கொட்டு மேளச் சத்தத்தை அமுக்கியது, நெருப்பைக் கொளுத்தியதும் படபடத்த நீளமான பட்டாசுச் சரம். கந்தக நெடியுடன் கங்கு நட்சத்திரங்கள், அங்குமிங்கும் சிதறிவிழுந்து மறைந்தன. புகைமேகம் காற்றில் அலையாடி அலையாடி… மேலழும்ப, தெப்பக்குளத்து நீரலைகளில் பட்டுத்தெறித்த சூரியக் கதிர்கள், துகள்களாய் மின்னிச் சிரித்தன. ஊர்வலம் மூனா.வானா ராவுத்தர் வீட்டை நெருங்கும்போது, மாப்பிள்ளையின் காருக்கு முன்னே அவனது நண்பர்கள் – நேற்றிரவு நடந்த பார்ட்டியின் தாக்கம் குறைந்திருந்தாலும்… அதே


நிழலற்ற பெருவெளி

 

 இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ காட்டிக்கொள்ளவில்லை. வருத்தமும் சந்தோஷமுமற்ற ஏதோவொரு பெருவெளியை நோக்கி, தான் பயணப்படுவதாக உணர்கிறது. இன்னும் விடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இருட்டில் நுழைந்த அது, எங்கோ மாயமாகிவிட்ட பிரமையிலிருந்து விடுபட, கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது, எனக்கு. நெடுநேரமாய் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்ததில் உடம்பு நோகிறது. புரண்டு மல்லாக்க முயற்சிக்கிறேன். ஒருவழியாய் உடம்பு அசைந்து மல்லாக்க… ஏதோவொன்று என்னிடமிருந்து விடுபடுகிறது.