கதையாசிரியர் தொகுப்பு: எம்.டி.முத்துக்குமாரசாமி

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு துண்டு வானம்

 

 இன்று கரெண்டு கொடுக்க என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களாம். தவறு. தவறு. தூய தமிழில் மட்டுமே நான் பேசவேண்டும். இன்று மின்சார அதிர்ச்சி தர என்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டார்களாம். இன்று எனக்கான பொறுப்பில் இருக்கும் அந்தக் குட்டிப்பெண தாதி இல்லை இல்லை செவிலி வரவில்லையாம். என் கனவின் திரைகளை கிழித்து எட்டிப்பார்த்திருப்பாளோ? எண்ணங்களின் புதைபடிவுகள் அங்கே பாளம் பாளமாக உறைந்திருப்பதைக் கண்டு பயந்து போயிருப்பாளோ? தாள முடியாத வலியின் கீறல் என் உடலின் வழி என் இருப்பின்


இரவு மணி 11.59

 

 “எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ அல்ல” என்ற அறிவிப்பு சம்பந்தனை வெகுவாக கவர்ந்தது. அவன் ‘ஆக்டோபஸ்’ என்ற மெய்நிகர் இரவு விடுதியில் ஒரு இணைய அவதாரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். ‘ஹாய்! உனக்கு இந்த வாயிலில் பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் காத்திருக்கிறது’ என்று சொல்லி கூடத்தில் தூணுக்குப் பின் மறைந்திருந்த பச்சை வர்ண ஒளித் திரையின் முன் சம்பந்தனை கூட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டு ஊர்சுளா


நாங்கள் கோபியை மிரட்டினோம்

 

 நாங்கள் கோபியை அடித்துப் பிடித்து இழுத்து வந்தபோது அவன் எங்கள் கண்ணுக்குப் புலப்படாத முள்ளம்பன்றிகளை கவனித்துக்கொண்டிருந்தான். பிரபாதான் அவன் மண்டையில் ஒன்று போட்டான் “என்னலே அங்க முறச்சு முறச்சு பாக்க?” கோபி திகைத்து வேறு உலகிலிருந்து இறங்கி வந்தவன் போல “பன்னி, முள்ளம் பன்னி” என்றான். மோகன் ஜிப்பை அவிழ்த்து “இதாலே முள்ளம் பன்னி” அப்படின்னு கேட்டபோது கோபி “இதுக்கு முள் இல்லைலா” என்றான். அப்போதே எங்களுக்கு பொறி தட்டியிருக்கவேண்டும் சரியான வட்டு கேசிடம் மாட்டிக்கொண்டோமென்று. பிரபா