கதையாசிரியர் தொகுப்பு: எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

1 கதை கிடைத்துள்ளன.

மீன் சாமியார்

 

 ‘மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ‘ என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை செய்ததும் நாராயணமூர்த்தி திடுக்கிட்டுத் திரும்பி ‘ஊம் . . . ? என்ன ? ‘ என்று வினவினான். ‘இல்லை, நானும் ஐந்து நிமிஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீ ஏகாக்கிர சித்தனாய் அன்பும் அனுதாபமும் நிறைந்த கண்களுடன் சமுத்திரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே! ஒருவேளை யோக சக்தியால் கடலின் சலனத்தைக் கட்டுப்படுத்தி அதை அமைதியான நித்திரையில் அமர்த்தப்