கதையாசிரியர் தொகுப்பு: என்.விநாயக முருகன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…

 

 செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, மேடையில் ஒருவர் நாகஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் வாழ்க்கையில் கேட்ட முதல் பாடல் அது. தனது அறுபது வயதில் எத்தனை முறை இந்தப்


தெகிமாலா நாட்டு சரித்திரம்

 

 முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு உணவு பஞ்சம் என்று எதுவும் இல்லை. நகத்தால் பூமியை கீறினாலே போதும் தண்ணீர் பீறிட்டெழும். வானத்தில் இருந்து அடிக்கடி தேவதைகள் தெகிமாலா நாட்டில் இறங்கி இளைப்பாறி செல்வர். தேவதைகளும், மனிதர்களும், தேவதூதர்களும் சந்தோசமாக ஒன்றாக இருந்த அந்த தெகிமாலா நாடு பார்ப்பதற்கு இந்திரனுக்காக மயன் வடிவமைத்த