கதையாசிரியர் தொகுப்பு: என்.ஜெகநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

இருள் புன்னகை

 

 அவன் தளத்துக்கு அடுத்த அரங்கு வாசலிலும், தம்பி தளத்துக் கதவின் பின்னாலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாமா கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அத்தைக்கு அவருக்குப் பக்கத்திலேயே பாய் விரிக்கப்பட்டிருந்தது. வளவு இருட்டாக இருந்தது.தளத்துக்குள் குண்டு பல்பிலிருந்து மெலிதாக வெளிச்சம். பங்களூரிலிருந்து மாமாவும் அத்தையும் வந்துவிட்டதாக மூன்று நாட்களுக்கு முன்பே தகவல் வந்து விட்டது. மாமா பங்களூரில் எதோ தொழில் செய்து நிறைய சம்பாதிப்பவர்.வருடத்திற்க்கு ஒருமுறை வந்து சம்பிரதாயமாக எல்லோரையும் பார்த்துவிட்டுப் போவார். அதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி.பாதிநாள்