கதையாசிரியர் தொகுப்பு: என்.சுவாமிநாதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்மலாட்டம்

 

 கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. இன்னிக்கு பார்த்து வெளியூருக்கு போன மகன் இன்னமும் வரவில்லை. மகன் உதவி இல்லாமல் எப்படி சூர சம்காரம் பொம்மலாட்டம் நடத்துவது? தருமலிங்கத்தின் மகன் பொம்மலாட்டத்தில் அவருக்கு உதவியாக இருப்பது வழக்கம். தருமலிங்கம் சூரனை இயக்குவதில் வல்லவர். அவர் மகன் முருகனை இயக்குவது வழக்கம். புதிசாக ஒருவருக்கு சொல்லிகொடுத்து ஒத்திகை பார்த்து நடத்த நேரமில்லை.


சாட்சி

 

 சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, ‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் இராமனிடம் சொன்னதுபோல், “கெடச் சுருச்சு ஆதாரம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். அழகிரி சொன்னதைக்கேட்டதும் தங்கராஜன் சாய்வு நாற்காலில் சற்று எழுந்து உட்கார்ந்து கொண்டார். “அழகிரி நீ சொல்றது மெய்யா. ஆதாரம் இருக்கா. இல்லாட்டி என் பேரு ரிப்பேராயிரும்” “பொய் சொல்வனா அய்யா. ஆதாரம் இல்லாத ஒங்ககிட்ட வருவனா?” கைப்பையிலிருந்து சில தாள்களை அழகிரி எடுத்து


வெளிநாட்டு வேலை

 

 ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ”ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே” என்று கோபத்தோடு வினவினார் தலைமை கணக்கர் ராமநாதன். ”இன்னிக்கு ஆள காணோம். ஒடம்பு சரியில்ல போல. ஒங்கிட்ட லீவு சொல்லலியா” என்று கேட்டார் பார்த்தசாரதி. ஆபீசே ரங்கனுக்கு காத்திருந்தது. சிற்றுண்டிக்கடை அருகில் முப்பதடி தூரத்தில் இருந்தாலும ரங்கனை அனுப்பி எல்லோருக்கும் டீ வாங்கி வரச் சொல்லுவார்கள். ரங்கன் ஒரு கடைநிலை ஊழியன். இந்த வேலை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இருக்காது.