கதையாசிரியர் தொகுப்பு: உமா கல்யாணி

6 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னயாவினும் புண்ணியம் கோடி…

 

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது. அப்படி இருந்தால்தான் முடியும். நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களுமாய் நிரம்பி வாழ்கிற ஊருக்கு, சோம்பலைக் கொண்டாடவெல்லாம் நேரமும் கிடையாது, அது மாதிரியான சிந்தனையும் வராது. எழுந்து கொண்டதுமே வியர்வை சிந்தத் தயாராகி விடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நகரும். நகர்த்தவும் முடியும். சின்னத்தாயும், சில பெண்களுமாய் மலைப்பகுதியை நோக்கி நடக்கிறார்கள். ஃபாரஸ்ட் வாச்சர்


சாகவில்லை

 

 “”ஏட்டி ஏ கும்பிகுளத்தா, ஒம்மனசுல நீ என்னதாம்டி நெனைச்சுக்கிட்டிருக்கே? ஐநூறு ரூவாயக் கடன் வாங்கிட்டு வந்து எம்புட்டு நாளாச்சு, அயத்துப் போய்ட்டியோ? கடனை வாங்கத்தான் கை நீளுமோ? திரும்பிக் குடுக்கணும்ன்னா நீளாதோ? எடுடி ரூவாய” என்று அதட்டியபடி வந்து நின்றாள் லெட்சுமிப் பாட்டி. “”எதுக்கு இம்புட்டுச் சத்தம் போடுதிய? கடன் வாங்கின ஓர்மை இல்லாம ஓடியா போய்டப்போறேன்? தாறேன் பாட்டி, எல்லாம் தாறேன்” என்று நயந்த குரலில் சொன்னாள் கும்பிகுளம் ஆவுடை. நிறையப் பேர் அவளை கும்பிகுளத்தாள்


சோமப்பனின் மரம்

 

 “”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி. இரண்டாம் வகுப்பில் படிக்கிற சோமப்பனை விடவும், தள்ளு வண்டியின் உயரம் அதிகம். எனினும் சிரமப்பட்டுக் கொண்டே போய் செட்டியார் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்துவிடுவான். அவசியம், நிர்பந்தம் என்று வந்துவிட்டால், வயதுக்கும், வலுவுக்கும் மீறிய செயல்களைக் கூடச் செய்துவிட முடியும். அவனோ, தூணோடு தூணாய் அசையாமல் இருந்தான். “”ஏன்டா இப்படிச் சம்பிக் கிடக்கிறே? நேத்திக்கு


செய்யாமையாலும்…

 

 “”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில் ஊறிக் கிடந்த அழுக்குத் துணிகளை அள்ளிப் படித்துறையில் போட்டாள் சிவனி ஆச்சி. துணிகளுக்குச் சோப்புப் போட்டுக் கொண்டிருந்த மயிலாள், சிவனி ஆச்சியை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு, மீண்டும் தனது பணியைத் தொடரலானாள். “”நீ நாகரீகமாச் சோப்புப் போடுத. நான் பழைய பஞ்சாங்கம். சலவைக்காரத்துல துணிகளை முக்கி, ஆத்தாங்கரை வரைல சுமந்துக்கிட்டு வந்து தொலைக்கிறேன். சோப்பு


எல்லாவற்றிலும் பங்கு!

 

 “”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே வேற. வெளில போ…” என்று, கோபமான குரலில் கத்தினான் அசோகன். இவ்வளவு மோசமான எதிர்ப்பை எதிர்பார்த்திராத கணேஷ், வெல வெலத்துப் போனான். “போனதும் சிறிது எதிர்ப்பு இருக்கும். பிறகு சரியாகிப் போய் விடும்…’ என்று எண்ணித்தான், புறப்பட்டு வந்தான் கணேஷ். ஆனால், வெட்டி முறிக்கிற ஆவேசப் பேச்சாய் அல்லவா இருக்கிறது. நிறைய யோசனை செய்து, வேண்டியவர்களிடம் ஆலோசனை


களப்பலி

 

 ”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து. கத்திரி வெயிலு போடு போடுன்னு போட்டாலும் திண்ணையில அம்புட்டுச் சூடு தெரில. ஓலைக் கூரை. சாணி போட்டு மொழுகுன மண் திண்ணையில்லா! குடிசைக்கு உள்ள இருந்து கையில் சுளகோடு பிரமு வந்தா. சுளகுல வீடு தூர்த்தி அள்ளுன குப்பை. மெயின் ரோட்டைத் தாண்டி இருக்குற குப்பைக்கிடங்குல போய்க் கொட்டிட்டு வரணும். பால்மாடு இருக்கு. அதோட சாணமும் குடிசையில