கதையாசிரியர் தொகுப்பு: உத்திரபுத்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

சங்க இலக்கியத்தில் ஊறுகாய்

 

 வழக்கம்போல் உதவிப்பேராசிரியர் குப்பம்மாள் தனது கல்லூரிக்கு வாடகை தானியில் பயணித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றிப்பெற்று அரசு அமைத்த இன்றைய முதல்வரின் புகைப்படம் சாலையோரப் பதாகையில் தெரிந்தது. அவரின் சிரித்தமுகம் குப்பம்மாவிற்கு ஒருவிதப் புத்துணர்ச்சியை அளித்தது. அந்த மாநகரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜவுளி வியாபாரிகளை உருவாக்கிய ஜவுளிக்கடையைக் கடந்து செல்கையில் அக்கடையின் பெயரைப் பார்த்த பின்பு குப்பம்மாவிற்குத் தன்னுடைய பெயர் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன. தன்னுடைய பெயருக்குப் பின்னுள்ள அரசியலில் இது வரை அவள் பட்டதுயரங்கள்