கதையாசிரியர் தொகுப்பு: உடுவை எஸ்.தில்லைநடராசா

13 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பக்கடை நடக்கிறது

 

 ஹாய்… ஹாய். கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுெட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும் போட்டு வரலாமெண்டால்… வாணை செல்லாச்சி. என்ன அப்பம் வாங்கவோ? கொஞ்சம் இரணை, சுட்டுத்தாறன். இண்டைக்கு எழும்பவும் பிந்திப்போச்சு; கடைசி வென்ளிக்கிழமையாகவும் கிடக் குது; ஒருக்கால் சன்னதி கோயிலுக்கும் போட்டு வர வேணும், பிறகு செல்லாச்சி எப்பிடி உங்கட பாடுகள். ஓ நீ சொன்னது மெய்தான். அப்பம் சுட்டு விக்கிறதிலை இப்ப ஒண்டும் அவ்வளவு ஆதாயமில்லை. எனக்கென்ன வீடுகட்ட, கார் வாங்கவே காசு? அண்டாடம்


க்ஷணப்பித்தம்

 

 (1973 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச் சென்று ஏறிக்கொள்கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன். ஒரு பெண், ஒரு வாலிபன் ஆகியோருக்கு இருக்க இடமில்லை. ஆடிச்சென்று கொண்டிருக்கும் பஸ் அதிலிருந்தவர்களையும் ஆடவைத்துக் கொண்டு இருக்கிறது. கிழவனுக்கு பின்னால் நிற்கும் வாலிபனின் வசீகரம் பெண்ணின் மனதைக் கவர்கிறது. அது காதல் அல்ல. ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும்


பிரபலம்

 

 கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை வீதியொன்றின் வழியாகப் பலர் மத்தியான உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது சென்றனர். அவர்களில் அநேகமானவர்கள் அரசாங்க அலுவலகங்கிலும், கூட்டுத்தாபனங்களிலும் வேலை பார்க்கும் உத்தியோகத்தவர்களாவர். வெய்யில் என்றால் வயிறு கேட்குமா? அந்தச் சிறிய வீதிலுள்ள கடையொன்றில் மத்தியானச் சாப்பாட்டுக்காக நடுத்தரக் குடும்பத் தலைவர்களும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம். விலைவாசி உயர்ந்து விட்ட இந்த நாட்களிலும் சிக்கனச் செலவில் சிறந்த சாப்பாட்டை அங்கே பெற்றுக்


நிர்வாணம்

 

 வேலையை முடித்துக்கொண்டு காரியாலயத்திலிருந்து வெளியேறிய சந்திரன் யோர்க் வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். யோர்க் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சந்திரனின் கண்களைக் கவர்ந்தன. ‘பென்ஸ்’ ‘ஹம்பர்’ ‘பிளைமவுத்’ ஒவ்வொரு காரின் பெயரையும் வாசித்துக்கொண்டு வந்த சந்திரனின் மனம், “சீ..ஒரு சுவீப் விழுந்துதெண்டாலும் என்ன சுதியாக ஓடித்திரியலாம்” என்று எண்ணியது. “பெரிய கார்தான் இல்லாட்டிலும் ஒரு மொரிஸ் மைனர் இருந்தாலும் காணும்” என யோசித்துக்கொண்டு வந்த சந்திரனின் தோளை உரிமையுடன் ஒரு கரம்


கன்னத்தில்

 

 காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை வழியனுப்பி வைக்க வந்த பாலன் சொன்னான். “மச்சான் கொழும்புக்குப் போன உடனே தபால் போடு…..முடியுமெண்டால் நான் சொன்ன சாமான் என்ன விலையெண்டு கேட்டு எழுது” “போன உடனே முதல் வேலை இதுதான்” என்று சொல்லிவிட்டு “எங்கடை செல்வராணி கலியாணம் முடிச்சிட்டாளாம் தெரியுமோ?” எனக் கேட்டான் நடராசன். “ஓ, பசறையிலை ஆரையோ மரி பண்ணியிருக்கெண்டு கமலா சொன்னது” பதிலளித்த பாலன் நடராசனையும் ஒரு கேள்வி கேட்டாள். “இந்திராணியும் யாழ்ப்பாணத்திலைதான் எங்கையோ கலியாணம்


விருந்து

 

 கொழும்பு நகரில் நாகரீகமானவர்கள் வாழும் பெரிய மாடமாளிகைள் நிறைந்திருந்த கல்லூரி வீதியில் செல்வரத்தினத்தின் மாடி வீட்டை பார்த்தபடி இருந்தது ரங்கனின் சிறிய தகரக் கொட்டில், செல்வரத்தினத்துக்கு கார் நிறுத்தும் கராஜாகப் பயன்பட்ட அந்தக் கொட்டில் இன்று ரங்கனின் வீடாக மாறியிருக்கிறது. வீடு என்று சொல்வதை விட இன்றோ நாளையோ இடிந்து விழும் இறுதிக் கட்டத்திலுள்ள கொட்டில் என்று சொல்வதே பொருந்தும். இற்றுப் போன பழைய தகரங்களால் மூன்று பக்கங்களும் சுவர் போல அடைக்கப்படடிருந்த அந்த வீட்டை சாதாரணமான


குடையைக் கண்டனீங்களோ?

 

 “குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை தேடு படலம் தான்- “குடையைக் கண்டனீங்களோ?” வீட்டுக்கும் கடைக்கும் இடைத்தூரம் அதிகமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மூன்று நிமிட நேர நடை அல்லது மூன்னூறு மீற்றர் தூரம். ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல ஆறு மணிக்குப் போகத்தான் வேணும்-தினசரிப்பேப்பர் எடுப்பதற்கு. மழைபெய்யயில்லை..மழைக்குணமும் இல்லை. ஆறு மணிக்கு வெய்யில் அடிக்காதென்றும் தெரியும். ஆனாலும் ஒரு


வாசக் கட்டி

 

 செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை சூழ, பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு முன்னாலும் பின் னாலும் கற்பூரச் சட்டிகளும், காவடிகளும் வந்து கொண் டிருந்தன. வீதி வலம் வந்து கொண்டிருந்த முருகனுக்குப் பின்னால் பாடவல்ல பஜனைக் கோஷ்டியினர் தோத்திரப் பாடல்களைப் பண்ணோடு பாடிய வண்ணம் வந்தனர். தொண்டமனாற்றில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் சந்நிதி முருகனைத் தரிசிக்க வந்தவர்களும், வேடிக்கை பார்க்க வந்த வேறு சிலரும் மற்றவர்களை இடித்து நெருக்கிக் கொண்டு வடக்கு வீதிக்குச் சென்றார் கள்.


சந்நிதிக் கோயில் சாப்பாடு

 

 “அரோகரா…அரோகரா…” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா…” ஒலி கோவிலை அதிரக் செய்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தை மூடியிருந்த திரை விலகியதும் ஐயர் வேல்முருகனுக்குத் தீபாராதனை செய்யும் காட்சியை கண்ட பக்தர்கள் தம்மை மறந்து பக்திப்பரசவத்தில் சுத்திக் கொண்டிருந்தார்கள். “கந்தனுக்கு அரோகரா”“முருகனுக்கு அரோகரா”வேலனுக்கு அரோகரா”“முருகா முருகா” அடியார்களின் ஓசையோடு ஆலயமணியின் ஓசையும் சேர்ந்து கொண்டது. பூசை நல்ல படியாக நடந்துகொண்டாக எண்ணியவர்கள். தங்கள் கைகள் தட்டிக்கொண்டார்கள். சிறிது நேரத்துக்கு முன்பு எழுந்த


ஒரு சோக நாடகம் தொடர்கிறது

 

 அன்று நடந்தது – எனக்கு அது புது அனுபவம். அவளுக்கும் அப்படித் தான். இழகக்கூடாததொன்றை இழந்த சோகம். சோர்ந்து போய்ப் படுக்கும் அவள் முகத்தில் தெரிகிறது. மெதுவாக இந்த இடத்தை விட்டு நழுவுகின்றேன். “ஸ் மணி ஏழாகுது. நான் போயிட்டு வாறன். இங்கே நடந்ததொண்டையும் ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்.” விமலாவின் உறவு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற மனப்பயம் என்னை கொழும்புக்கு இழுத்து வந்தது. எழுது வினைஞன் வேலை கிடைத்ததும் ‘கிளப் டான்ஸ்-பொப் இசை என்று அலைந்து கொண்டிருந்த