கதையாசிரியர் தொகுப்பு: ஈசன் நாகமுத்து

1 கதை கிடைத்துள்ளன.

மழை பெய்யுது!

 

 இரவெல்லாம் கண்விழித்து அட்டூழியம் செய்துவிட்டு, அதிகாலையில் நித்திரைக்குச் சென்ற சிறு குழந்தை போல திருச்சி மாநகரம் அமைதியாய் இருந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை சிலுப்பி விஸ்தரித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூக்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். தாய்ப்பறவைகள் பொழுது புலர்ந்ததை பொருட்படுத்தாமல், தத்தம் கூடுகளில் தத்தம் குஞ்சுகளை தத்தம் இறக்கைகளால் போர்த்தி, வரும் குளிர் காற்றிலிருந்து காப்பாற்றி, தூங்க வைத்துக்கொண்டிருந்தன. “ ரேஷ்மி, எந்திரி மா ”, சமையல் அறையில் இருந்தபடியே,